HDFC வங்கி கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்வது எப்படி? 5 எளிய வழிகள் இதோ!
HDFC வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை எப்படி க்ளோஸ் செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறை என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
HDFC கிரெடிட் கார்டு
தனியார் வங்கி சேவையில் முன்னணியில் இருக்கும் HDFC வங்கி வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகளுக்கு ஏற்ப பல்வேறு கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த கிரெட் கார்டுகளை நாம் பயன்படுத்தும்போது பிரத்யேக சலுகைகள், கேஷ்பேக், போனஸ் கேஷ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை HDFC வழங்குகிறது. சிலர் HDFC வங்கி வழங்கிய கிரெட் கார்டுகளை க்ளோஸ் செய்ய திட்டமிட்டுருந்தால் அதற்கான வழிமுறைகளை பின்வருமாறு பார்ப்போம்.
கிரெட் கார்டுகளை க்ளோஸ் செய்ய ஆன்லைன் சமர்ப்பிப்பு, எழுத்துப்பூர்வ கோரிக்கை, நேரடியாக கிளைக்கு செல்வது, வாடிக்கையாளர் சேவையை அழைப்பது அல்லது மெய்நிகர் உதவியாளர் EVA ஐப் பயன்படுத்துதல் என 5 வாய்ப்புகளை ஹெப்டிஎப்சி வங்கி வழங்குகிறது. இந்த வழிகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி நீங்கள் கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்யலாம்.
ஆன்லைன் வாயிலாக கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்யும் முறை
1.HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும்.
2.அங்கு படிவங்கள் மையப் பிரிவில் கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்யும் படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
3.பின்பு அந்த படிவத்தில் உங்கள் பெயர், கிரெடிட் கார்டு எண் மற்றும் தொடர்புத் தகவலை படிவத்தில் உள்ளிடவும்.
4.பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை HDFC வங்கியின் வாடிக்கையாளர் பராமரிப்பு மின்னஞ்சல் ஐடியில் சமர்ப்பிக்கவும்.
எழுத்துபூர்வ கோரிக்கையுடன் கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்யும் முறை
1.உங்கள் பெயர், கிரெடிட் கார்டு எண் மற்றும் ரத்து செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு முறையான கடிதத்தை எழுத வேண்டும்.
2.கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் செல்லுபடியாகும் ஐடியின் சான்றின் நகலை இணைக்கவும்.
பின்னர் அந்த ஆவணங்களை அஞ்சல் பெட்டி எண். 8654, திருவான்மியூர், சென்னை – 600041 என்ர முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
நேரடியாக கிளைக்குச் சென்று கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்யும் முறை
1.உங்களுக்கு அருகிலுள்ள HDFC வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
2.அங்கு அடையாளச் சான்றுடன் கிரெடிட் கார்டு க்ளோஸ் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
3.வங்கி பிரதிநிதிகள் உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து கோரிக்கையைச் செயல்படுத்துவார்கள்.
கஸ்டமர் கேர் மூலம் கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்யும் முறை
1.HDFC வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர் பராமரிப்பு உதவி எண்ணை அழைக்கவும்.
2.உங்கள் அட்டை விவரங்கள் மற்றும் தனிப்பட்ட சரிபார்ப்புத் தகவலை வழங்கவும்.
3. இப்போது உங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்யக் கோருங்கள். கஸ்டமர் சர்வீஸ் அதிகாரி நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார்.
Virtual bot EVA மூலம் கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்யும் முறை
1.நீங்கள் HDFC வங்கியின் மெய்நிகர் உதவியாளரான (Virtual bot) EVA ஐப் பயன்படுத்தி, ‘கிரெடிட் கார்டு மூடல்’ என டைப் செய்யவும்.
2. கேட்கப்படும்போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்கவும்.
3. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
4. பின்பு கிரெடிட் கார்டு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்.
5. பிறகு கிரெடிட் கார்டை ஏன் மூடுகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
இதை செய்வதன்மூலம் உங்கள் கிரெடிட் கார்டு க்ளோஸ் கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்க முடியும்.
கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யும் முன் இதை கவனியுங்கள்
1.கிரெடிட் கார்டு EMIகள், வட்டி மற்றும் கட்டணங்கள் உட்பட நிலுவைத் தொகைகள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கணக்கு இருப்பு பூஜ்ஜியத்தை விட அதிகமாக இருந்தால் உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்படாது.
2..உங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு போனஸ் பாயிண்ட்கள் இருந்தால், கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்வதற்கு முன்பே அதை பயன்படுத்தி விடுங்கள்.