கடந்த 5 ஆண்டுகளில் டிஃபென்ஸ் பங்குகள் அதிக லாபம் தந்திருந்தாலும், சமீபத்திய சரிவுகள் முதலீட்டாளர்களுக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளன. HAL மற்றும் BEL போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் டிஃபென்ஸ் பங்குகள் பாரிய வளர்ச்சி பெற்று முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியமான லாபங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக 2020-க்கு பிறகு ஆரம்பமான பங்குசந்தை புளீஷ் ரனில், 2023-ஆம் ஆண்டில் அதிக வேகத்தில் மேலேறியது. இதற்குக் காரணமாக பாதுகாப்பு பட்ஜெட்டின் அதிகரிப்பு, 'மேக் இன் இந்தியா' முயற்சிகள் மற்றும் ஏற்றுமதி சந்தையின் விரிவாக்கம் ஆகியவரை குறிப்பிடப்படுகிறது.

2020-ல் 1 லட்சம் ரூபாய் இந்த பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ₹18 லட்சமாக இருந்திருக்கும் – இது சுமார் 14 மடங்கு அதிகமாகும். ஆனால், அண்மையில் ஏற்பட்ட சரிவுகளால் தற்போது மீண்டும் முதலீடு செய்வதற்கான சரியான தருணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் திடீரென ஏற்பட்ட போர் பதற்றம் டிஃபென்ஸ் பங்குகளை பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பாரத் டைனமிக்ஸ் பங்குகள் உச்சம்

ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வடிவமைத்த பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 6 மாதங்களில் முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாகிஸ்தானுக்கு தோல்வியையும் இந்தியாவுக்கு வெற்றியையும் தேடித்தந்துள்ளது. இந்த நிலையில் ஆகாஷ் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு கருவிகளை தயாரித்து வரும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 3 மாதங்களில் 90 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் முதலீட்டாளர்கள் பணம் இரட்டிப்பாகியுள்ளது. பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 2020 ஆன்று ஒருவர் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 17 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 400 சதவீதம் உயர்ந்துள்ளன.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)

இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு பிஎஸ்யூ நிறுவனமாக விளங்கும் ஹிஏஎல், மஹாரத்னா அந்தஸ்து பெற்றுள்ளது. 4,200 க்கும் மேற்பட்ட விமானங்கள், 5,200 என்ஜின்கள், மற்றும் 17 உள்ளூர் வடிவமைப்புகளை உருவாக்கியுள்ள இந்நிறுவனம், பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. கடைசி 5 ஆண்டுகளில் வருவாய் வருடாந்திர 9% விகிதத்தில் வளர்ந்துள்ள நிலையில், லாபம் அதைவிட வேகமாக 26% வளர்ச்சியுடன் ₹7,600 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வருவாய் 11% வளர்ச்சி பெற்று ₹17,300 கோடியாகவும், நிகர லாபம் 32% உயர்ந்து ₹4,360 கோடியாகவும் இருந்தது.

நடப்பு ஆண்டு நிலவரப்படி ₹1.3 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர் புக் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு உள்ளதாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ₹1.33 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்கள் 3-6 மாதங்களில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் BHEL

இந்திய அரசின் 51.14% பங்குடன் செயல்படும் BHEL, பாதுகாப்பு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரேடார், கம்யூனிகேஷன் மற்றும் இலகு மின்னணு போர் உபகரணங்களை இந்திய ராணுவத்திற்கு வழங்குகிறது. சென்ற ஆண்டில் அதன் வருவாய் 15% அதிகரித்து ₹20,270 கோடியாகவும், நிகர லாபம் 30% உயர்ந்து ₹3,990 கோடியாகவும் இருந்தது. 81% வருவாய் இந்திய பாதுகாப்பு துறையிலிருந்து வந்தாலும், ஏற்றுமதி துறையில் வருவாய் 11%-இல் இருந்து 17%-க்கு உயர்ந்துள்ளது.பெல்நிறுவனம் தனது வருவாயின் 6-7% அளவைக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது. இது நிறுவனத்துக்கு எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கும் வலிமையையும், போட்டி முன்னிலையில் இருக்க உதவுகிறது.

முதலீடு செய்யலாமா?

HAL மற்றும் BEL இரண்டும் வலுவான ஆர்டர் புக், நிலையான வருவாய் வளர்ச்சி, மற்றும் அரசின் உள்நாட்டு உற்பத்தி ஊக்கமளிப்பு காரணமாக எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான வாய்ப்புகளை வழங்குகின்றன. இருப்பினும், தற்போதைய உயர் மதிப்பீட்டின் மத்தியில், முதலீட்டாளர்கள் கவனத்துடன் நீண்டகால நோக்கில் பங்குகளை ஆராய்வது அவசியம்.