ரூபாய் நோட்டுகள் :
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. இதன் விளைவாக மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை . இதன் விளைவாக இந்தியாவிற்கு தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி சரிவு :
கடந்த ஆண்டு தங்கம் விற்பனை 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்குவோர் பான் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளதால், தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது.
தங்கம் விலை உயர வாய்ப்பு :
வரும் ஜூலை மாதம் , ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலுக்கு வந்தால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தங்கம் கடத்தல், மற்றும் அதிகளவில் தங்கம் திருடு போவதற்கான வாய்ப்பும் அதிகளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், தங்கம் விலை கடும் உயர்வை சந்திக்கும் என கணிக்கப்படுகிறது.
