hdfc merger news: HDFC ,HDFC வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
ஹெச்டிஎப்சி வங்கியை, ஹெச்சிஎப்சி வீட்டுக்கடன் கழகத்துடன் இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி(RBI) அனுமதியளித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கியை, ஹெச்சிஎப்சி வீட்டுக்கடன் கழகத்துடன் இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி(RBI) அனுமதியளித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் நிறுவனம் இணைவு குறித்து கடந்த ஏப்ரல் மாதம் முடிவு எடுத்துஅறிவிக்கப்பட்டது. இந்த இணைவு மூலம் நாட்டிலேயே 2வது பெரிய நிறுவனம் என்ற பெயரை ஹெச்டிஎப்சி பெறும்.
எஸ்பிஐ(SBI) வாடிக்கையாளர்களுக்கு புதியவசதி! இந்த 5 முக்கிய சேவைகளை மொபைலிலேயே பெறலாம்
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தார்போல் 2-வது பெரிய நிறுவனமாக ஹெச்டிஎப்சி வங்கி உருவாகும், டிசிஎஸ் நிறுவனத்தை 3-வது இடத்துக்கு தள்ளும். ஹெச்டிஎப்சி,ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் 4000 கோடி டாலராக அதாவது ரூ.14 லட்சம் கோடியாக சொத்து அதிகரிக்கும்.
சந்தையில்இணைவது இதுதான் மிகப்பெரியநிகழ்வாக இருக்கும். இந்த இரு நிறுவனங்கள் இணைப்புக்கும் இரு நிர்வாகத்தின் வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சம்மதம் அளித்துவிட்டனர்.
இந்த இரு வங்கிகளின் இணைவுக்கு கடந்த வாரம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி ஒப்புதல் அளித்துவிட்டது, தடையில்லாச் சான்றும் அளித்துவிட்டது. மேலும், இந்திய சந்தைவர்த்தகபோட்டி ஆணையம், தேசிய கம்பென் சட்ட தீர்ப்பாயமும் இரு வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளித்துவிட்டன.
போதும்டாசாமி! கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், டெபாசிட், திரும்பப்பெறுதலை நிறுத்திய வால்ட் நிறுவனம்
இந்நிலையில் ரிசர்வ் வங்கியும் தடையில்லாச் சான்று அளித்து ஒப்புதல்அளி்த்துள்ளது. இது குறித்து ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் “ ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் வசதி வங்கி ஆகியவை இணைப்புக்கு ரிசர்வ் வங்கி 2022, ஜூலை 4ம்தேதி ஒப்புதல் அளித்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளது.
இருவங்கிகளும் இணைந்தால், இவற்றின் சந்தை மதிப்பு ரூ.18 லட்சம் கோடியாகஅதிகரிக்கும். இந்த இணைப்பு 2023-24ம் நிதியாண்டின் 2-வது அல்லது 3-வது காலாண்டில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்த இணைப்பு நடைமுறைக்கு வந்தால், ஹெச்டிஎப்சி வங்கி 100 சதவீதம் பொதுப்பங்குகளைக் கொண்டதாக மாறும். ஏற்கெனவே இருக்கும் பங்குதாரர்கள்க 41 சதவீதம் பங்குகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ஹெச்டிஎப்சி பங்குதாரரும் ஹெச்டிஎப்சி வங்கியின்25 பங்குகளைப் பெறுவார்கள்.
3 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐடிசி பங்குகள்விலை உயர்வு: 10% அதிகரிப்பு: பங்குகளை விற்கலாமா?
நாட்டிலேயே அதிகமான வங்கிக்கிளைகளையும், ஏடிஎம்களையும் வைத்திருக்கும் வங்கி, எஸ்பிஐவங்கிக்கு அடுத்தார்போல் ஹெச்டிஎப்சியாகும். எஸ்பிஐ வங்கிக்கு நாடுமுழுவதும், 22ஆயிரம் கிளைகளும், 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களும் உள்ளன. அடுத்தார்போல் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு 7 ஆயிரம் கிளைகளும், 17ஆயிரத்துக்கும் அதிகமான ஏடிஎம்மையங்களும் உள்ளன.
கடந்த 9 மாதங்களில் அதிகமான நிகரலாபம் கொண்ட இந்திய வங்கி ஹெச்டிஎப்சியாகும். ரூ.36.90 ஆயிரம் கோடி நிகரலாபத்தை ஹெச்டிஎப்சி வங்கியும்,ஹெச்டிஎப்சியும் பெற்றுள்ளன. 2-வதாக எஸ்பிஐ வங்கி ரூ.22 ஆயிரம கோடியும், 3-வதாக ஐசிஐசிஐவங்கி ரூ.16ஆயிரம் கோடி லாபத்தையும் ஈட்டியுள்ளன