sbi : எஸ்பிஐ(SBI) வாடிக்கையாளர்களுக்கு புதியவசதி! இந்த 5 முக்கிய சேவைகளை மொபைலிலேயே பெறலாம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி, தங்களின் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் மூலம் 5 விதமான முக்கிய சேவைகளை வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தங்களின் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் மூலம் 5 விதமான முக்கிய சேவைகளை வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த 5 சேவைகளுக்காக வங்கிக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்கலாம். இந்த 5 சேவைகளும் இலவச தொலைப்பேசி எண்களில் 24 மணிநேரமும் பெறலாம்.
சேவை:1
வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தின் இருப்பையும், கடைசி 5 பரிமாற்றத்தின் தகவல்களையும் பெறலாம்.
சேவை: 2
ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோய்விட்டாலோ அந்த கார்டை பிளாக் செய்யும் வசதி. ஏடிஎம் கார்டு வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்குஅனுப்பப்பட்டுவிட்டால் அதை அறிந்து கொள்ளும் வசதி
சேவை: 3
காசோலை புத்தகம் வங்கியிலிருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டு விட்டதா அல்லது நிலவரம் என்ன ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வசதி
சேவை: 4
டிடிஎஸ் பிடித்தம் விவரங்கள், பணத்தை டெபாசிட் செய்திருந்தால், அதற்குரிய சான்றிதழை மின்அஞ்சலில் அனுப்பப்பட்ட தகவலை அறிதல்
சேவை: 5
பழைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது பிளாக் செய்துவிட்டாலோ புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு உதவி பெறும் வகையில் டோல்ஃப்ரீ எண் வழங்கப்பட்டுள்ளது.
முதல் எண்: 1800 1234
2-வது எண்: 1800 2100
இது தவிர 24 மணிநேரமும் அழைக்கும் வகையில் 1800 11 2211 என்ற எண்ணும், 1800 425 3800 என்ற 2-வது எண்ணும், 080-26599990 ஆகிய எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. டோல்ஃப்ரீ எண்களை லேண்ட்லைன் தொலைப்பேசி, மொபைல் போன்களில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும்
எஸ்பிஐ வங்கிக்கு நாடுமுழுவதும்22,266 கிளைகளும், 65,030 ஏடிஎம் மையங்களும், 68,016 பிசி அவுட்லெட்களும் உள்ளனஎன்பது குறிப்பிடித்தக்கது.