hdfc bank share: ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி இணைகிறது: எப்போது நடக்கும்? 2-வது பெரிய நிறுவனமாக மாறும்
hdfc bank share: ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இந்த இணைவு மூலம் நாட்டிலேயே 2வது பெரிய நிறுவனம் என்ற பெயரை ஹெச்டிஎப்சி பெறும்.
ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இந்த இணைவு மூலம் நாட்டிலேயே 2வது பெரிய நிறுவனம் என்ற பெயரை ஹெச்டிஎப்சி பெறும்.
ரூ14 லட்சம் கோடி
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தார்போல் 2-வது பெரிய நிறுவனமாக ஹெச்டிஎப்சி வங்கி உருவாகும், டிசிஎஸ் நிறுவனத்தை 3-வது இடத்துக்கு தள்ளும். ஹெச்டிஎப்சி,ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் 4000 கோடி டாலராக அதாவது ரூ.14 லட்சம் கோடியாக சொத்து அதிகரிக்கும்.
ஹெச்டிஎப்சி,ஹெச்டிஎப்சி வங்கி இணைவுக்குப்பின், 100 சதவீதம் முழுமையான பொதுமக்களின் பங்குகளைக் கொண்ட நிறுவனமாக மாறும். ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 25 பங்குகளுக்கும், ஹெச்டிஎப்சி வங்கியின் 42 பங்குகளை பெறுவார்கள். கடந்த 2007ம் ஆண்டுக்குப்பின் இரு நிறுவனங்கள் சந்தையில்இணைவது இதுதான் மிகப்பெரியநிகழ்வாக இருக்கும். இந்த இரு நிறுவனங்கள் இணைப்புக்கும் இரு நிர்வாகத்தின் வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சம்மதம் அளித்துவிட்டனர்.
18 மாதங்கள் வரை
இந்த இரு நிறுவனங்கள் இணைப்பும் உடனடியாக நடந்துவிடாது. ஹெச்டிஎப்சி, ஹெச்டி எப்சி வங்கியின் பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும், ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தைகள், செபி ஆகியவற்றிடம் ஒப்புதல் பெற்றபின்புதான் இணைவு சாத்தியமாகும். இதற்கு 15 முதல் 18 மாதங்கள்வரை ஆகலாம்.
சிறந்த போட்டி
இந்தஒப்புதல் கிடைக்கும் வரை ஹெச்டிஎப்சி, ஹெச்டி எப்சி வங்கி இரு நிறுவனங்களுமே வழக்கம்போல் தனித்தனியகவே செயல்படும்.
ஹெச்டிஎப்சி வங்கித் தலைவர் தீபக் பரேக் கூறுகையில் “ இந்த மாற்றம் தவிர்க்கமுடியாதது. ஆனால், பங்குதாரர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் இது வரவேற்கக் கூடியதுதான். இரு நிறுவனங்கள் இணைப்பு நிறுவனங்களை போட்டியாளர்களுக்கு வலுவான போட்டியாக இருப்பதோடு, கடன் வழங்குவதிலும் சந்தையில் சிறநத் போட்டியை உருவாக்கும்.
சந்தை மதிப்பு
ஹெட்சிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4.80 லட்சம் கோடியாகவும், ஹெச்டி எப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.9.20 லட்சம் கோடியாக இருக்கிறது. ஹெச்டிஎப்சியின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு ரூ.8.80 லட்சம் கோடியாகவும், ஹெச்டி எப்சி வங்கியின் சொத்து மதிப்பு ரூ.18.40 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் ஹெச்டிஎப்சி ரூ.10 ஆயிரத்து 41 கோடி நிகர லாபத்தில் செல்கிறது, ஹெச்டிஎப்சி வங்கி ரூ.26ஆயிரத்து 906 கோடி நிகர லாபத்தில் செல்கிறது.
2-வது பெரிய வங்கி
ஹெச்டிஎப்சி இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஹெச்டிஎப்சி ஹோல்டிங் ஆகியவை ஹெச்டிஎப்சியுடன் இணையும். அதன்பின் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்டி வங்கியுடன் இணையும். ஹெச்டிஎப்சி லைப், ஹெச்டிஎப்சி எம்எப் ஆகியை ஹெச்டிஎப்சி வங்கியின் துணை நிறுவனங்களாகும்.
நாட்டிலேயே அதிகமான வங்கிக்கிளைகளையும், ஏடிஎம்களையும் வைத்திருக்கும் வங்கி, எஸ்பிஐவங்கிக்கு அடுத்தார்போல் ஹெச்டிஎப்சியாகும். எஸ்பிஐ வங்கிக்கு நாடுமுழுவதும், 22ஆயிரம் கிளைகளும், 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களும் உள்ளன. அடுத்தார்போல் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு 7 ஆயிரம் கிளைகளும், 17ஆயிரத்துக்கும் அதிகமான ஏடிஎம்மையங்களும் உள்ளன.
லாபம்
கடந்த 9 மாதங்களில் அதிகமான நிகரலாபம் கொண்ட இந்திய வங்கி ஹெச்டிஎப்சியாகும். ரூ.36.90 ஆயிரம் கோடி நிகரலாபத்தை ஹெச்டிஎப்சி வங்கியும்,ஹெச்டிஎப்சியும் பெற்றுள்ளன. 2-வதாக எஸ்பிஐ வங்கி ரூ.22 ஆயிரம கோடியும், 3-வதாக ஐசிஐசிஐவங்கி ரூ.16ஆயிரம் கோடி லாபத்தையும் ஈட்டியுள்ளன.