gupta brothers net worth:தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை ஊழல் குற்றச்சாட்டில் சிக்க காரணமாக இருந்தவர்களும், இந்தியர்வின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா இருவரையும் துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர். குப்தா சகோதரர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரான்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
gupta brothers:தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை ஊழல் குற்றச்சாட்டில் சிக்க காரணமாக இருந்தவர்களும், இந்தியர்வின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா இருவரையும் துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர். குப்தா சகோதரர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரான்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 பேர் கைது
இருவரின் கடைசி சகோதரர் அஜெய் குப்தா எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் அவர் கைது செய்யப்படவில்லை.
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்ட குப்தா குடும்பத்தார் அரசு அதிகாரத்தில் புகுந்து தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தது, நிதிமோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை குப்தா குடும்பத்தார் மறுக்கிறார்கள்

தென் ஆப்பிரிக்காவில் செயல்பட்டுவந்த பாராஸ்டாட்டல் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை எடுத்துக்கொண்டு குப்தா சகோதரர்கள் கடந்த 2018ம் ஆண்டு துபாய்க்கு தப்பிச்சென்றனர்.
செருப்பு விற்பனை
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஸ் குப்தா ஆகிய 3 சகோதரர்கள் கடந்த 1990களில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றனர். அங்கு காரில் செருப்பு வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதன்பின் சஹாரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தை மூவரும் தொடங்கினர்.
நெருக்கம்
தென் ஆப்பிரிக்காவின் வறுமை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்ட குப்தா சகோதரர்கள் அரசு அதிகாரத்துக்குள் மெல்ல நுழைந்து தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதிக்கத் தொடங்கினர். 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுவரை அதிபராக இருந்த தென் ஆப்பிரி்க்ககாங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் குப்தா சகோதரர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தினர்.
ஆட்சி அதிகாரத்தில் தலையீடு
அதன்பின் அரசு அதிகாரங்களில் தலையிடுவது, பதவிகளை நிரப்புவதற்கு லஞ்சம் பெறுவது உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் குப்தா சகோதரர்கள் ஈடுபட்டனர். அப்போது அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா நெருக்கமாக இருந்ததால், இதைக் கண்டு கொள்ளவி்ல்லை.

தப்பி ஓட்டம்
குப்தா சகோதரர்களின் அட்டூழியம் அரசாங்கத்தில் கொடிகட்டிப் பறந்தது. இதற்கு எிதராக கடந்த 2017ம் ஆண்டு முதல்போராட்டங்களும், எதிர்ப்புகளும் வெளிப்பட்டன. குப்தா சகோதரர்கள் செய்த ஊழல், ஜேக்கப் ஜூமாவின் ஆதரவு உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்கள் வெளியாகவே, தேர்தலில் தென் ஆப்பிரிக்க காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தேர்தல் முடியும் முன்பே தென் ஆப்பிரிக்காவில் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, குப்தா சகோதரர்கள் துபாய்க்கு தப்பிச் சென்றனர்.
அதிபருக்கு சிறை
குப்தா சகோதரர்கள்ஊழலுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, ஆயுதக் கொள்முதலில் ஊழல் நடந்தது உள்ளிட்ட வழக்கில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டு அவர் கம்பிஎண்ணுகிறார்.
அதிபரையே கம்மி எண்ணவைத்த குப்தா சகோதரர்கள் துபாயில் இருப்பதைஅறிந்து அவர்களை தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துவர அந்நாட்டு போலீஸார் முயன்றனர். இது தொடர்பாக இன்டர்போல் உதவி நாடப்பட்டு ரெட்நோட்டீஸ் 3பேருக்கும் எதிராக விடுக்கப்பட்டது.
மறுப்பு
ஐக்கிய அரபு அமரீகத்துக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே கைதிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் இல்லாததால், குப்தா சகோதர்ரகளை ஒப்படைக்க யுஏஇ அரசு மறுத்துவிட்டது.

கைது
இதுதொடர்பாக ஐ.நா.வில் தென் ஆப்பிரிக்க அரசு முறையிட்டது. அதன்பின் 2021ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் நடந்வுடன் குப்தா சகோதரர்களை அழைத்துசெல்ல தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் துபாய் போலீஸார், குப்தா சகோதர்களில், ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 3-வது நபர் மட்டும் சிக்கவில்லை.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க நீதி மற்றும் உள்துறை அமைச்சகம் விடுத்த அறிக்கையில் “ நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த குப்தா சகோதரர்களில் ராஜேஸ், அடுல் ஆகியோர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துவரும் முயற்சியில் இருக்கிறோம். இதற்கு தேவையான ஒத்துழைப்பை ஐக்கி அரபு அமீரகம் அரசுக்கு தென் ஆப்பிரிக்கா வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
