2019ம் ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வசூல், மூன்றாவது முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 

ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாகவும் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் கஜானாவை மோடி நிரப்பி வருகிறார்.