இன்று  முதல் 3 நாட்கள் நடக்கும் ஜிஎஸ்டி  கவுன்சில்  கூட்டம் ....!!!

நவம்பர் 22   என்பதால் ,இது  குறித்த  முக்கிய  முடிவு , இன்று டெல்லியில், தொடங்கி உள்ள சரக்கு மற்றும் சேவை வரி  கவுன்சில் கூட்டத்தில்  முக்கிய முடிவு  எடுக்கப்படும் என  எதிர்பார்கபடுகிறது.

இந்நிலையில், மூன்று நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சேவை வரி செலுத்தும் 11 லட்சம் கணக்குகளை மத்திய அரசு தன்வசமே வைத்துக் கொள்வது தொடர்பாக முடிவு செய்யப் படும்  என  தெரிகிறது. மத்திய  அரசின்  இந்த  முடிவிற்கு, இரண்டு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில்,  இன்று தொடங்கி உள்ள , இந்த ஜி எஸ் டி  கூட்டத்தில், இரண்டு மாநிலங்களையும்  சமாதானபடுத்தி, மத்திய அரசுக்கு  சாதகமாக  ஒருமித்த முடிவு எடுக்கபடும்  என தெரிகிறது.

மத்திய  அரசின்  இந்த  முடிவால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இந்த வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு , வேறு  நான்கு  வழிகள்  உள்ளதாக மத்திய  அரசு  தரப்பில்  இருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.