Asianet News TamilAsianet News Tamil

ஜி.எஸ்.டி.க்கு சிக்கல் -பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏப்ரலில் வருவது கடினம்

gst bill-implementation-is-very-tough-due-to-some-state
Author
First Published Jan 3, 2017, 9:44 PM IST


மத்தியஅரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு அதிகரித்துள்ளதால், அதிகமான விற்பனையாகும் ஒரு சில பொருட்களுக்கு மாநில அரசுகள் வரி விதித்துக்கொள்ளும் உரிமையும், செஸ் வரி விதிக்கும் பொருட்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவும்  ஜி.எஸ்.டிகவுன்சிலிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இழப்பு அதிகரிப்பு

தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய ரூ.55 ஆயிரம் கோடி இழப்பீடு நிதி ஒதுக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குபின், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு அதிகரித்துள்ளதால், இந்த இழப்பு ரூ. 90 ஆயிரம் கோடிவரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களுக்கு வரி வருவாய் 40 சதவீதம் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், இந்த கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் முன்வைத்துள்ளன.

gst bill-implementation-is-very-tough-due-to-some-state

ஜி.எஸ்.டி. கவுன்சில்

மத்தியஅரசு அடுத்த நிதியாண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜி.எஸ்.டி.க்குதுணைச்சட்டங்களான மாநில ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றை வகுக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு தலைவராக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

8-வது கூட்டம்

இதுவரை 7 முறை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. ஆனால், சில முக்கிய விஷயங்களில் மாநிலங்கள், மத்தியஅரசுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில்,ஜி.எஸ்.டி.8 வது மாநாடு டெல்லியில்  நடைபெற்றது 

இதில் மாநிலங்கள் தரப்பில்  ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துவதால் ஏற்கனவே வருவாய் இழப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை காரணமாக கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால், அதிகமான விற்பனையாகும் ஒரு சில பொருட்களுக்கு மாநில அரசுகள் வரி விதித்துக்கொள்ளும் உரிமையும், செஸ் வரி விதிக்கும் பொருட்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சரக்கு கப்பலுக்கு வரி

ேமலும், மாநிலங்களின் கடற்கரைப்பகுதியில் 12 கடல்மைல் தொலைவுக்குள் வரும் கப்பல்கள், படகுகளுக்கு வாட் விதிக்கப்படும். ஆனால்,  ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்குபின், அந்த வரியை மாநிலங்கள் விதித்துக்கொள்ளும் உரிமையும் அளிக்க வேண்டும் என மேற்குவங்காளம், கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த மாநிலங்களின் கோரிக்கை குறித்து சட்டரீதியாக விளக்கம் கேட்கப்படும் என நிதிஅமைச்சர் ஜெட்லி தெரிவித்துவிட்டார்.

இழுபறி

ஆனால், ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருவாய் வரும் வரி செலுத்து நபர்களை மத்திய ஜி.எஸ்.டி வரி செலுத்தும் பிரிவில் கொண்டுவருவதா, அல்லது மாநில ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் பிரிவில் கொண்டுவருவதா என்ற இழுபறியில் இருக்கும் விஷயம் குறித்து நேற்று ஆலோசிக்கப்படவில்லை.

இதனால், வரும் ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.gst bill-implementation-is-very-tough-due-to-some-state

இது குறித்து மேற்கு வங்காளமாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா கூறுகையில், “ மாநிலங்களுக்கு உட்பட்ட கடற்பகுதிக்குள் 12 கடல்மைல் தொலைவில் வரும் கப்பல்கள், படகுகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை மாநிலங்கள் விதித்து வசூலிக்கும் உரிமையை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.  இதில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இழுபறி நீடிக்கிறது.

மேலும், ஜி.எஸ்.டி. முக்கிய அம்சமான குறிப்பிட்ட வருவாய் உள்ள வரி செலுத்துவோரை மாநில அரசுக்குள் கொண்டுவருவதா?, மத்தியஅரசுக்குள் கொண்டுவருவதா? என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. மேலும், 1500 பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்தும் முடிவாகவில்லை. ரூபாய் நோட்டு தடையால் மைனஸ் 2 சதவீதம் வரிவருவாய் குறைந்துவிட்டது'' என்றார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios