ஒரு நாளைக்கு 50 செலுத்தினால் போதும்.. ரூ.35 லட்சம் ரிட்டன் கிடைக்கும் - அஞ்சலகத்தின் அருமையான திட்டம்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் சேமித்து வந்தாலே ரூ.35 லட்சம் வரையில் வருமானம் ஈட்ட முடியும்.
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சேமிப்பை தொடங்க சிறந்த இடம் இந்திய அஞ்சல் அலுவலகம் தான். அரசாங்கம் குடிமக்களுக்கு அஞ்சலகம் மூலம் ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது.
முழுமையாக வளர்ச்சியடையாத கிராமப்புறங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகிறது.
கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் மிகவும் பிரபலமாக விளங்குவது கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் ஆகும். இதுபோன்ற திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் சேமித்து வந்தாலே ரூ.35 லட்சம் வரையில் வருமானம் ஈட்ட முடியும். 19 வயதைத் தாண்டிய யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம்.
அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள். இத்திட்டத்தில் இணைந்து முதலீடு செய்வோருக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையில் உறுதித் தொகை கிடைக்கும். முதலீடு செய்யும் நபருக்கு 80 வயது ஆகும்போது முதிர்வுத் தொகை மற்றும் போனஸ் தொகை கிடைக்கும்.
இதையும் படிங்க..நீங்க காதலில் பிரேக் அப் ஆனவரா.? கவலைப்படாதீங்க உங்களுக்கும் இருக்கு பக்காவான இன்சூரன்ஸ்
இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையிலோ செலுத்தலாம். திர்வு காலம் ஒரு வருடத்திற்குள் இருக்குமாயின் அல்லது பிரீமியம் நிறுத்தம் ஏற்பட்டால் இந்த வாய்ப்புக்கு தகுதில்லை. பாலிசி முன்னரே சரண்டர் செய்யப்படுமாயின் குறைந்த காப்பீடு தொகை மற்றும் அதற்கு ஏற்ற சதவீக்கதில் மட்டுமே போனஸ் வழங்கப்படும்.
தினசரி சுமார் 50 ரூபாய் வீதம் மாதம் ரூ.1,515 செலுத்துவதன் மூலம் Rs. 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இந்த பாலிசி மூலம் 55 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.31,60,000 திரும்ப பெறலாம். 58 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.33,40,000 திரும்ப பெறலாம். 60 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.34.60 லட்சம் திரும்ப பெறலாம். இதுபோன்ற சேமிப்பு திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்