காதலில் பிரேக் அப் ஆனவரா நீங்கள் அப்படி என்றால், உங்களுக்கு தான் இந்த பதிவு.

காதலில் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கு ஒருவர் புரிந்து, பேசி, பழகி அதனை திருமணம் என்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதுண்டு. சில நேரங்களில் இந்த காதல் பயணம் பாதி வழியில் நின்று திருமணம் தடைபடுவதும் உண்டு.

காதல் தோல்விக்கு பின்பான காலகட்டத்தில் ஆணோ , பெண்ணோ தங்களை அக்காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்வதுண்டு. ட்விட்டர் பயனரான பிரதீக் ஆர்யன், அவரும் அவரது முன்னாள் காதலியும் இணைந்து ‘ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்’ ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த பிரேக்கப் இன்சூரன்ஸ் திட்டத்தில் காதலர்கள் இருவரும் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

பின்பு அதில் இருவரும் மாதந்தோறும் 500 என்ற வகையில் பணம் செலுத்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில் யார் முதலில் ஒருவரை விட்டு செல்கிறாரோ அதவாது காதலித்து யார் ஏமாற்றம் அடைகிறாரோ மற்றொருவருக்கு அந்த இன்சூரன்ஸ் பணம் முழுமையாக கிடைக்கும் என்பதே இந்த பிரேக் அப் இன்சூரன்ஸ் திட்டம்.

துரதிர்ஷ்டவசமாக, ஆர்யனின் காதலி இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனை ஏமாற்றிவிட்டாள். அவர்களின் பிரேக்கப் காப்பீட்டு நிதியில் சேகரிக்கப்பட்ட ரூ.25,000 அவருக்கு கிடைத்தது. “என் காதலி என்னை ஏமாற்றியதால் எனக்கு 25000 ரூபாய் கிடைத்தது. எங்கள் உறவு தொடங்கியதும். உறவின் போது கூட்டுக் கணக்கில் மாதாந்திர ரூபாய் 500 டெபாசிட் செய்தோம்.

Scroll to load tweet…

மேலும் யாரை ஏமாற்றினாலும், எல்லாப் பணத்தையும் விட்டுவிடுவோம் என்று பாலிசி செய்தோம். அது ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் (HIF)” என்று ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் நூற்றுக்கணக்கான வேடிக்கையான கருத்துகளுடன் வைரலாகியுள்ளது. பலரும் பலவாறாக இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்