நாட்டின் கடன் 155.6 லட்சம் கோடி... ஜிடிபியில் 57.1 சதவீதம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தகவல்

மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன் ரூ.155.6 லட்சம் கோடியாக இருந்தது. இது 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5 சதவீதத்தில் இருந்து 23ஆம் நிதியாண்டில் ஜிடிபியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Govt debt stands at Rs.155.6 lakh cr in March 2023

2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மத்திய அரசின் கடன் ரூ.155.6 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதம் என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், "மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன் ரூ.155.6 லட்சம் கோடியாக இருந்தது. இது 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5 சதவீதத்தில் இருந்து 23ஆம் நிதியாண்டில் ஜிடிபியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

2023 நிதியாண்டின் இறுதியில் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக லாபம் ஈட்டும் சென்னை விமான நிலையம்! நாட்டிலேயே 2வது இடம் பிடித்து அசத்தல்!

Govt debt stands at Rs.155.6 lakh cr in March 2023

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சௌத்ரி, இந்தியப் பொருளாதாரத்தில் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) 2019 நிதியாண்டில் ரூ.45.41 லட்சம் கோடியில் இருந்து 2023இல் ரூ.54.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்கான சிறப்பு நிதியுதவித் திட்டம் பற்றிக் கூறியுள்ள அமைச்சர், நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கான மூலதனச் செலவு  மற்றும் முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ₹84,883.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை ₹29,517.66 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளின் மூலதனச் செலவினங்களுக்காக பல்வேறு மாநிலங்களுக்கான மூலதனச் செலவினங்களுக்காக 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லாக் கடனாக அரசு ஒப்புதல் அளித்து சிறப்பு நிதியுதவிகளை வழங்குகிறது.

"2021 நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.15 சதவீதத்தில் இருந்தது. இது 2023 நிதியாண்டில் ஜிடிபியில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய பட்ஜெட் 2023-24 இல் இந்தியப் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சியைத் தக்கவைக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

மூலதன முதலீட்டு செலவினம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 33 சதவீதம் அதிகரித்து ₹10 லட்சம் கோடியாக (ஜிடிபியில் 3.3 சதவீதம்) அதிகரித்துள்ளது. மத்திய அரசின் 'பயனுள்ள மூலதனச் செலவு' 2024ஆம் நிதியாண்டிற்கு 13.7 லட்சம் கோடி (ஜிடிபியில் 4.5 சதவீதம்) என பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டது எனவும் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்! சம்பளம் மற்றும் EMI பேமெண்ட்களை பாதிக்கும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios