சோ சிம்பிள்.. 35 வயதில் 41 கோடியுடன் பக்காவா செட்டில் ஆகிடுவேன் - டக்கர் கணக்குப்போடும் 22 வயது கூகுள் இளைஞன்!
சுமார் 41 கோடி ரூபாய், அதாவது சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்து வைத்துவிட்டு, 35 வயதில் சௌகரியமாக தனது ஓய்வு காலத்தை கழிக்க சென்றுவிடுவேன் என்று 22 வயது இளைஞர் ஒருவர் ரொம்பவும் கான்பிடெண்டாக கூறியுள்ளார், வாருங்கள் அதைக்குறித்து பார்க்கலாம்.
இன்றைய போட்டி நிறைந்த யுகத்தில் வேலை அழுத்தம் காரணமாக, தங்களுடைய குடும்பத்திற்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் பல இளைஞர்கள். ஆனால் அதே சமயம் இந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் என்பது மிகவும் அதிகம். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த 22 வயதான தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் 35 வயதில் ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி அறிக்கையின்படி, 22 வயதான அந்த கூகிள் நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சமீபத்தில் $5 மில்லியனைச் சேமித்து 35 வயதில் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். சேமிப்புக் கணக்கில் பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி சிறுவயதிலேயே அவரது பெற்றோர்கள் கற்றுக்கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: இடைநிறுத்திய கனடா!
அந்த நபரின் பெற்றோர் அவருக்கு சிறு வயது முதலே சேமிப்பை பற்றியும், அதை எப்படி சேமிப்பது என்பது குறித்து சிறப்பாக விளக்கியுள்ளனர். வங்கியில் பணத்தை சேமிப்பதால் பெரிய லாபம் இல்லை என்றும், பணத்தை முதலீடு செய்ய கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் அந்த இளைஞருக்கு கற்றுக்கொடுத்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற பட்டதாரியான Nguonly என்ற அந்த இளைஞன், இரண்டு ஆண்டுகளில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்புக்குப் பிறகு, Qualtrics என்ற ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது, அதே சமயம் தகவல் மற்றும் தரவு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற படிக்க தொடங்கி ஆகஸ்ட் 2022ல் படிப்பை முடித்தார்.
இதற்கிடையில், அவர் கடந்த டிசம்பர் 2021ல் கூகுளில் பணியாற்றத் தொடங்கிய நிலையில், தற்போது போனஸ் உட்பட அவரின் ஆண்டு வருமானம் சுமார் 1.6 கோடி. இதில் சுமார் ரூ.1.1 கோடியை, ஓய்வூதியம் மற்றும் பிற முதலீட்டுக் கணக்குகள் மற்றும் கலிபோர்னியா மற்றும் புளோரிடாவில் உள்ள குடியிருப்புகளில் அவர் முதலீடு செய்து வருகிறாராம்.
கூகிள் நிறுவனம், வாரத்திற்கு மூன்று முறை காலை உணவு மற்றும் மதிய உணவை இலவசமாக வழங்குவதால், Nguonly உணவுக்காக கூட அதிக பணம் செலவழிப்பதில்லையாம். உலக அளவில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட அவர், ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு முறை உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறாராம்.
சத்தமில்லாமல் வசூல் வேட்டை நடத்தும் மெட்டா! பிசினஸ் உரையாடல்களை காசாக்கும் வாட்ஸ்அப்!