இந்த ஆண்டு வருமான வரி ரீபண்ட் தாமதமாவதற்கான காரணங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) விளக்கியுள்ளது.

இந்த ஆண்டில் வருமான வரி திருப்பிச் செலுத்துதல் கடுமையாக தாமதமாகி வருவது பலரையும் கவலையடைய செய்துள்ளது. தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. நிலுவையில் உள்ள ரீபண்ட்கள் விரைவில் வழங்கப்படும் என சரியான அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

ரீபண்ட் ஏன் தாமதமாகிறது?

மத்திய நேரடி வரிகள் வாரியம் தரப்பில் இருந்து உயர்-மதிப்பு, ரீபண்ட் கோரிக்கைகள் மற்றும் ரெட் பிளாக் செய்யப்பட்ட கோப்புகள் அதிகமாக உள்ளன. இத்தகைய கோப்புகளில் தவறான விவரங்கள், சந்தேகமான கணக்கீடுகள், பொருந்தாத தகவல்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதால், கூடுதல் ஆய்வு அவசியமானது.

குறைந்த மதிப்புள்ள ரீபண்ட்

பிடிஐக்கு அளித்த பேட்டியில் CBDT தலைவர் ரவி அகர்வால், அதிக மதிப்புள்ள மற்றும் சிஸ்டம் பிளாக் செய்த ரிட்டர்ன்களின் ஆய்வு இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். குறைந்த மதிப்புள்ள ரீபண்ட்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு வருவதாகவும், சரியான ரீபண்ட்கள் இந்த மாதத்திலோ அல்லது டிசம்பரிலோ எனவும் வழங்கப்படும் கூறியுள்ளார்.

ஆய்வு கட்டாயம்

துறை கண்டுபிடித்த முக்கிய பிழைகள்:

- மிகைப்படுத்தப்பட்ட கழிவு கோரிக்கை

- தவறான TDS விவரங்கள்

- படிவம் 26AS / AIS பொருத்தமின்மை

- சம்பளம் + வெளிநாட்டு வருமானம் + மூலதன லாபம் இருப்பதால் கைமுறை ஆய்வு தேவை

- இ சரிபார்ப்பு செய்யாத வருமானம்

இந்த காரணங்கள் அனைத்தும் ரீபண்ட் செயல் தாமதப்படுத்துகின்றன.

இந்த ஆண்டு ரீபண்ட் குறைந்ததற்கான காரணம்

CBDT தலைவர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு ரீபண்ட் தொகை 18% குறைந்துள்ளது. முக்கிய காரணங்கள்:

1. புதிய TDS அமைப்பு காரணமாக பலரின் வரி கழிவு குறைந்தது — ரீபண்ட் தேவையே குறைந்தது

2. இந்த ஆண்டு ரீபண்ட் கோரிக்கை சமர்ப்பிப்பும் குறைந்துள்ளது

உங்கள் ரீபண்ட் ஏன் தாமதமாக இருக்கலாம்?

தனிப்பட்ட காரணங்களில் சில:

- ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள ரீபண்ட் அதிக ஆய்வுக்கு உட்படும்

- திருத்தப்பட்ட ரிட்டர்ன் தாக்கல் செய்தால் செயல்பாடு நீளும்

- வங்கி / படிவம் 26AS / AIS பொருந்தவில்லை

- பல்வேறு வருமான ஆதாரங்கள் உள்ளன

- வெளிநாட்டு வருமானம் காரணமாக கூடுதல் அதிகாரி சரிபார்ப்பு தேவை

ரிட்டர்ன் தாக்கல் முடிவுத்தேதி மாற்றம்

இந்த ஆண்டு ITR படிவ மாற்றம் மற்றும் சிஸ்டம் மேம்பாடு காரணமாக, ரிட்டர்ன் தாக்கல் கடைசி தேதி ஜூலை 31 இலிருந்து செப்டம்பர் 15, 2025 ஆக நீட்டிக்கப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செப்டம்பர் 16 வரை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.