gold rate today: இந்தியாவில் தங்கத்தின் ஸ்கிராப் சப்ளை அதிகரித்தும், தேவையும் குறைந்திருப்பதால், சர்வதேச சந்தையில் ஒருஅவுன்ஸ் தங்கத்துக்கு 40 டாலர் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் தங்கத்தின் ஸ்கிராப் சப்ளை அதிகரித்தும், தேவையும் குறைந்திருப்பதால், சர்வதேச சந்தையில் ஒருஅவுன்ஸ் தங்கத்துக்கு 40 டாலர் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
தங்கம் ஸ்கிராப் என்பது, பழைய தங்க நகைகள், தங்கக் காசுகள் போன்றவை. இவற்றைக் கொடுத்து புதிய நகைகளாகவோ அல்லது பணமாகவோ மக்கள் பெற்றுச் செல்வதாகும்.

விற்பனை மந்தம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தங்கத்தின் விலையில் ஏற்படும் அதிகமான ஏற்ற இறக்கம், சீனாவில் லாக்டவுன் நடவடிக்கை, இந்தியாவில் தங்கத்தின் தேவையில் குறைவான எழுச்சி போன்றவைதான் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய தங்கத்தை மக்கள் வாங்காமல் ஸ்கிராப் நகைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக நகை செய்யும் நிறுவனங்கள்பழைய நகைகளையே பயன்படுத்துவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவையும் குறைந்துள்ளது

தள்ளுபடி
அந்த வகையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விற்பனையும், தேவையும் குறைந்திருப்தால், பல்வேறு டீலர்கள் ஒருஅவுன்ஸ் தங்கத்துக்கு 40 டாலர் வரை(ரூ.3,036) வரை தள்ளுபடி தருகிறார்கள். இதில் இறக்குமதி வரி 10.75% 3% விற்பனை வரியும் அடங்கும். கடந்த வாரம் 35 டாலர்களாக இருந்தது தற்போது 40 டாலர்களாக உயர்ந்துவிட்டது.
இந்தியாவில் கடந்த வாரம் குடி பட்வா எனும் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போதுகூட தங்கம் விற்பனை பெரிதாக சூடுபிடிக்கவி்ல்லை. வழக்கமான தங்க விற்பனையைவிட குறைந்தே இருந்தது என வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். தங்கம் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் தங்கம்ஸ்கிராப்பை வர்த்தகர்கள் ஆர்வமாக வாங்குவதால் அதன்விலை லேசாக அதிகரித்துள்ளது.
சீனாவில் லாக்டவுன்

சீனாவில் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருப்பதால், தங்கத்தின் விலை 3 டாலர் முதல் 2 டாலர்கள் வரை தள்ளுபடி தரப்படுகிறது. ஆனால், கடந்தவாரத்துக்கு முந்தைய வாரம் 6 டாலர்கள்வரை தள்ளுபடி தரப்பட்டது.
பாதுகாப்பான முதலீடு
ரஷ்யா உக்ரைன் போரால் பங்குச்சந்தைகளும் ஏற்றத் தாழ்வில் உள்ளன, உடனடியாக பணமாக மாற்றும் பொருளாக வைத்திருக்க வேண்டும் என்பதால் தங்கத்தில்தான் மக்கள் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். பாதுகாப்பாகவும் கருதுகிறார்கள். சீனாவில் பல்வேறு நகரங்களில் கொரோனா பரவலால் லாக்டவுன் கொண்டுவரப்பட்டாலும் சந்தையில் தங்கம் விற்பனை சீராகவே இருக்கிறது.

வர்தத்க நகரான ஹாங்காங்கில் தங்கம் விற்பனை அவுன்ஸ் ஒன்றுக்கு 3 முதல் 2 டாலர்வரை தள்ளுபடி தரப்படுகிறது, சிங்கப்பூரில் கடந்த வாரம் ஒரு டாலர் முதல் 1.80 டாலர் வரையிலும் இருந்தது, தற்போது ப்ரீமியம் நகைகளுக்கு 1.20 டாலர் முதல் 1.60 டாலர் வரை தள்ளுபடி தரப்படுகிறது
