gold rate today :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சரணுக்கு 120 ரூபாயும் வீழ்ச்சி அடைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சரணுக்கு 120 ரூபாயும் வீழ்ச்சி அடைந்தது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,740க்கும், சவரண் ரூ.37,920க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,755 ஆகவும், சவரணுக்கு, ரூ. 120 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து40க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 5 தேதி முதல் சவரண் ரூ.38 ஆயிரத்துக்கு குறையாமல் இருந்தநிலையில் கடந்த 14,15ம் தேதிகளில் மட்டுமே 37ஆயிரம் ரூபாயாகக் குறைந்தது.

இன்று காலை முதல் மீண்டும் தங்கத்தின் விலை சரவண் ரூ.38ஆயிரத்தைத் தொட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதைத் தொடரந்து முதலீட்டாளர்கள் கவனம் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.66 க்கும் ஒரு கிலோ ரூ.66000க்கு விற்பனையாகிறது.
