"தங்கம் கட்டாயம் தேவை".. ஆனால் தேவையின் அளவு மிக குறைவு...!  சவரன் 30 ஆயிரம் எகிறியதால் மக்கள் நினைப்பது இது தான்..! 

சவரன் 30 ஆயிரம் கடந்தது.. சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது என்றாலும்..  இப்போதைக்கு தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. 

தங்கம் வாங்குவதே பெரும் கேள்விக்குறி தான்..! 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு பின்பு இதுநாள்வரை 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்து உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் விலை 26 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி தரும் விதமாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை நேற்று 30 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் மீண்டும்  தங்கம் விலை  உயர்ந்து 30 ஆயிரத்தை  கடந்து தான்  விற்பனையாகி வருகிறது. ]

எவ்வளவு தான் தங்கம் விலை ஏறினாலும் இனி வரும் காலங்களில் தங்கத்தின் தேவை இருக்காது  என கூற முடியாது ஆனால் தேவையின் அளவு சற்று குறையலாம் என சொல்லலாம். 

இன்றைய தங்கம் விலை

கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 3753 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 20 பைசா உயர்ந்து 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.