மாலையில் மளமளவென குறைந்த தங்கம் விலை..! 

கடந்த மூன்று நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் சவரன் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது செய்கூலி சேதாரம் என சேர்த்து 33 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து 3700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் சவரன் 30 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை நிலவரம் 
  
கிராமுக்கு 41 ரூபாய் குறைந்தும் , சவரனுக்கு 328 ரூபாய் குறைந்தும் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 3658 ரூபாயாகவும், சவரன் 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 1.20 பைசா குறைந்து 51.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.