தங்கம் வாங்குவதே பெரும் கேள்விக்குறி தான்..! 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு பின்பு இதுநாள்வரை 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்து உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் விலை 26 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி தரும் விதமாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.அதன்படி இன்று 30 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 3765 ரூபாயாகவும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி
 
கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து 3741 ரூபாயாகவும், சவரனுக்கு 192 ரூபாய் குறைந்தும் விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு (-0.40) ரூபாய் குறைந்து 54.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு கூட ஒரு கிராம் தங்கம் வாங்கவும் யோசிக்கின்றனர்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வைத்துள்ள பெற்றோர்கள் தொடர் தங்கம் விலை உயர்வு காரணமாக பெரும் சிரமத்திற்கும் ஆளாகி உள்ளனர்.