gold rate decreased
தங்கம் விலை கடும் சரிவு..சவரனுக்கு 232 ரூபாய் குறைவு
கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை இறக்கம் கண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக தற்போது நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் எதிரொலியால், இந்திய பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்ததால் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 29 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 710 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 21 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
வெள்ளி
ஒரு கிராம் வெள்ளி ரூ. 42.80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடந்து சரிவு காணப்பட்டு, 22 ஆயிரத்தின் கீழ் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது .
