Asianet News TamilAsianet News Tamil

தங்கம் விலையில் திடீர் சரிவு...! வீட்டில் விசேஷம் என்றால் இப்பவே வாங்கிடுங்க...!

gold rate decreased above 500 rupess
gold rate decreased above 500 rupess
Author
First Published May 18, 2018, 12:16 PM IST


தங்கம் விலையில் 'திடீர்' சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. 

தங்கம் விலையில் மாற்றம்:gold rate decreased above 500 rupess

சென்னையில் கடந்த 13 ஆம் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 3 ஆயிரத்து 15 க்கும், பவுன் ரூ. 24 ஆயிரத்து 120 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டது.

அதன் படி கடந்த 5 நாட்களில் மட்டும், தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 65-ந்தும், பவுனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது.

காரணம்:gold rate decreased above 500 rupess

தங்கம் விலை திடீர் சரிவை சந்திக்க காரணம் குறித்து, சென்னை தங்க - வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலான் கூறுகையில். 'உலக அளவில் தங்க சந்தையில் வீழ்ச்சி காணப்படுவதால், உள்ளூர் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தங்கத்தில் முதலீது செய்தவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இது போன்ற காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இன்று தங்கத்தில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும். வரும் வாரங்களில் சீராகும் என அவர் தெரிவித்தார்.

வெள்ளி விலை:gold rate decreased above 500 rupess

சென்னையில் நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.43 க்கும், கிலோ ரூ.43 ஆயிரத்திற்கும் விற்பனையானது. நேற்று மட்டும் கிராமுக்கு 2 காசும், கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் 43 ஆயிரத்து 200 - க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios