சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.71,360. சர்வதேச பொருளாதார நிலவரம் மற்றும் பிற காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் ரூ 71,360-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்து இருந்த நிலையில் இன்று எந்த மாற்றமு இல்லை.சர்வதேச பொருளாதார காரணங்களால் சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகளவில் அதிகரித்து வந்த வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.

சர்வதேச நாடுகள் தங்களின் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உதாரணமாக ரஷ்யாவின் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் 8லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனா ஒவ்வொரு மாதமும் 40 டன் தங்கத்தை வாங்கும் என கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. அதன் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 8,900 டாலர் என்ற விலையைத் தொடும். இது ஆண்டுக்கு 19 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது. நடப்பாண்டின் இறுதியிலேயே ஒரு அவுன்சின் விலை 4,080 டாலர்களைத் தொடும் என அறிக்கையில் தெரிவிக்கவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 10,895 ரூபாயாக இருக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்றது. மே 22-ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது.

போர் பதற்றம், அமெரிக்காவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அனைத்தும் சில நாட்களாக இல்லாத நிலையில், மீண்டும் தங்கம் விலை தற்போது சரிந்து வருகிறது.இந்நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் ரூ 71,360-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்து இருந்த நிலையில் இன்று எந்த மாற்றமு இல்லை.வெள்ளி விலை இன்று சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 110.80 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.