Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: எட்டா கனியாக மாறும் தங்கம்! மிடில் கிளாஸ் மக்கள் கவலை! இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், நடுத்தரக் குடும்பத்து மக்களும், நகை வாங்கநினைப்போரும் பெரும் கவலையில் உள்ளனர்.

Gold price has  risen for the second day in a row: check rate in chennai, kovai, trichy and vellore
Author
First Published Dec 19, 2022, 10:24 AM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், நடுத்தரக் குடும்பத்து மக்களும், நகை வாங்கநினைப்போரும் பெரும் கவலையில் உள்ளனர்.

தொடர்ந்து 2வதுநாளாக விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாயும், சவரனுக்கு 112 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. 

தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,056ஆகவும், சவரன், ரூ.40,448ஆகவும் இருந்தது.

Gold price has  risen for the second day in a row: check rate in chennai, kovai, trichy and vellore

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து ரூ.5,070ஆகவும், சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ரூ.40 ஆயிரத்து 560ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,070க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும்விலை அதிகரித்து, சவரனுக்கு ரூ.200க்கும் மேல் உயர்ந்துள்ளது.  இன்னும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையாததும் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதும், நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினர், நகைவாங்க நினைப்போருக்கு தயக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

தலைசுத்த வைக்கும் தங்கம்! மீண்டும் இன்று விலை உயர்வு! நிலவரம் என்ன

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற கணிப்பு, பெடரல் வங்கி வட்டிவீத உயர்வு,  இங்கிலாந்து வங்கி, ஐரோப்பியயூனியன் வங்கி ஆகியவை வட்டி வீத உயர்வு சர்வதேச சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.இதனால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு தேடி, தற்போது தங்கத்தின் பக்கம் கவனம் திரும்பியதால் அதிகரித்து வருகிறது

Gold price has  risen for the second day in a row: check rate in chennai, kovai, trichy and vellore

வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 பைசா உயர்ந்து,  ரூ.73.10 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.73,100 ஆக ஏற்றம் கண்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios