Gold Rate Today: தலைசுத்த வைக்கும் தங்கம்! மீண்டும் இன்று விலை உயர்வு! நிலவரம் என்ன
தங்கத்தின் விலையை நினைத்தாலே தலைசுற்றவைக்கும் விதமாக ஒவ்வொருநாளும் விதவிதமான மாற்றத்துடன் தொடங்குகிறது.
தங்கத்தின் விலையை நினைத்தாலே தலைசுற்றவைக்கும் விதமாக ஒவ்வொருநாளும் விதவிதமான மாற்றத்துடன் தொடங்குகிறது.
கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து, நேற்று குறைந்தது, இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை நேற்றுமுன்தினம் ஒரேநாளில் ரூ.480 அதிகரித்த நிலையில் நேற்று ரூ.120 குறைந்தது, இன்று 88 ரூபாய் அதிகரித்துள்ளது.
பணம் கொட்டும் தொழில்.! குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சூப்பர் தொழில் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,045ஆகவும், சவரன், ரூ.40,360ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து ரூ.5,056 ஆகவும், சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ரூ.40 ஆயிரத்து 448ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,056க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை நேற்றுமுன்தின் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது, பின்னர் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது: என்னென்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?
இந்தவாரம் தொடங்கும் போது தங்கம் கிராம் ரூ.5,045 ஆக இருந்தது, உச்சகட்டமாக கடந்த இரு நாட்களுக்கு முன் ரூ.5,100வரை உயர்ந்து இன்று மீண்டும் ரூ.5,056 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. இந்த வாரத்திலும் தங்கத்தின் விலையில் மாற்றம் கிராமுக்கு ரூ.11 அளவில்தான் இருக்கிறது.
சவரன் ரூ.40,360 என்ற விலையில் தொடங்கி கடந்த 14ம் தேதி ரூ.40,800 வரை உயர்ந்தது. பின்னர் குறைந்து, இன்று ரூ.40,448 அளவில் இருக்கிறது
இன்னும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையாதது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினர், நகைவாங்க நினைப்போருக்கு தயக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெடரல் வங்கி, இங்கிலாந்து வங்கி, ஐரோப்பியயூனியன் வங்கி ஆகியவை வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன.இதனால், முதலீட்டாளர்கள் நோக்கம், தங்கத்தைவிடுத்து, பங்குப்பத்திரங்கள் மீது திரும்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்று கணிப்புகள் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை அளித்துள்ளன. இந்தக் காரணங்களால் தங்கத்தின் விலை ஊசலாட்டமான போக்கில் உள்ளது,
கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி! 3-வது கட்ட தங்கப் பத்திரங்கள் விற்பனை எப்போது? முழு விவரம்
வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.73.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ரூ.73,000 ஆக ஏற்றம் கண்டுள்ளது
- 22 carat gold rate in chennai today
- 22 carat gold rate today
- 22k gold price today
- 22k gold rate
- Chennai gold rate
- Gold Price in India
- Gold Prices in india Today
- Gold rate today
- Gold-Silver Price Today
- India Gold Price
- Today Gold Price
- Todays Gold Rate
- gold price
- gold price live
- gold price today
- gold rate
- gold rate in Chennai
- gold rate today
- gold rate today in Chennai
- gold today Chennai
- silver price
- silver price today
- silver rate
- silver rate today
- today gold price rate
- today gold rate 8 gram
- today gold rate in Chennai
- today gold rate in tamilnadu