குடும்ப தலைவிகளுக்கு பிடித்தமான தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எப்படி இருந்தாலும், நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் குறையாமலேயே இன்றளவும் இருக்கிறார்கள்.
தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால், தங்கம் விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240 விற்பனை ஆகியது.

சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 944 விற்பனை ஆகியது. அதேபோல கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,240க்கு விற்பனை ஆனது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, (மார்ச் 7) கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, வெள்ளி கிராம் ரூபாய் 70க்கும், கிலோ ரூ.70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..பெண்களுக்கு மாதம் "ஆயிரம் ரூபாய்" திட்டத்தை தொடங்கி வைத்தார் ம.பி முதல்வர் - தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா.?
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
