தங்கம் விலை வாரத்தின் முதல்நாளன இன்று அதிகரித்துள்ளது, தொடர்ந்து 3வது நாளாக விலை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளன இன்று அதிகரித்துள்ளது, தொடர்ந்து 3வது நாளாக விலை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,130ஆகவும், சவரன், ரூ.41,040ஆகவும் இருந்தது.

உச்சம் தொட்ட தங்கம் ! சவரன் ரூ.41 ஆயிரத்தைக் கடந்தது! இன்றைய(31/12/2022) விலை என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,150ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 200 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,150க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை பண்டிகைக்காலம் வருவதாலும், நகைப்பிரியர்கள், தங்கம் வாங்குவோர் தேவையால், விலை உயர்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தைக் கடந்துள்ளது மிடில்கிளாக் மக்களுக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வாரத்தில் தங்கம் விலை கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்தது. இந்த வாரத்திலும் விலை உயர்வை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பண்டிகைக் காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரலாம். 

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.! தாறுமாறாக எகிறிய தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தங்க்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதும், பங்குப்பத்திரங்களுக்குபதிலாக தங்கத்தின் மீதான முதலீடு திரும்பியதாலும் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்து வருகிறது

வெள்ளி விலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா உயர்ந்து, ரூ.74.50ஆக ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.74,500 ஆக அதிகரித்துள்ளது