தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஓரளவுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஓரளவுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,305ஆகவும், சவரன், ரூ.42,440ஆகவும் இருந்தது.

45 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ.5,295ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 360 ஆக குறைந்துள்ளதுகோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,295க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை பண்டிகைக் காலத்தையொட்டி தேவை அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து உயர்ந்ந்து வந்தது. ஆனால், பண்டிகைக் காலம் முடிந்தபின், கடந்த 2 நாட்களாக விலை கிராமுக்கு 22 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏறுவதை கண்டு கலங்கிப் போய் இருந்த நடுத்தரக் குடும்பத்தினருக்கு இந்த விலை குறைவு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும் தங்கம் விலை, சவரன் ரூ.42 ஆயிரத்தைக் கீழ் வரவில்லை.

அப்பாடா! தங்கம் விலை குறைந்தது! மிடில்கிளாஸுக்கு ஆறுதல்: இன்றைய நிலவரம் என்ன

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.75.80ஆக இருந்தநிலையில் 50 காசு குறைந்து, ரூ.74.80ஆகவும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.74 ஆயிரத்து 800ஆகவும் சரிந்துள்ளது