தங்கம் விலை கடந்த 6 நாட்களுக்குப்பின் இன்று முதல்முறையாகக் குறைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்தநிலையில் குறைந்தது நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

தங்கம் விலை கடந்த 6 நாட்களுக்குப்பின் இன்று முதல்முறையாகக் குறைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்தநிலையில் குறைந்தது நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 12 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,317ஆகவும், சவரன், ரூ.42,536ஆகவும் இருந்தது.

45 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 12 ரூபாய் சரிந்து ரூ.5,305ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 440 ஆக குறைந்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,440க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! சவரன் ரூ.350க்குமேல் எகிறியது: நிலவரம் என்ன?

தங்கம் விலை வரலாறு காணாத வகையில்கடந்த 6 நாட்களாக அதிகரித்து வருகிறது. இதில் பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்ததால் விலை உச்சத்தை எட்டி நேற்று சவரன் ரூ.52,536 வரை உயர்ந்தது. ஆனால், கடந்த 6 நாட்களுக்குப்பின் தங்கம் விலை இன்று மக்கள் மீது கருணை காட்டி குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் கிராமுக்கு 57ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

 வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.75.80ஆக இருந்தநிலையில் 30 காசு குறைந்து, ரூ.75.30ஆகவும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.75 ஆயிரத்து 300ஆகவும் குறைந்துள்ளது