தங்கம் விலை 3வது நாளாக இன்றும் குறைந்த போதிலும் பெரிதாக ஆறுதல் அளிக்கும் வகையில் இல்லை.

தங்கம் விலை 3வது நாளாக இன்றும் குறைந்த போதிலும் பெரிதாக ஆறுதல் அளிக்கும் வகையில் இல்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,295ஆகவும், சவரன், ரூ.42,360ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,290ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 320 ஆக குறைந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,290க்கு விற்கப்படுகிறது.

அப்பாடா! தங்கம் விலை குறைந்தது! மிடில்கிளாஸுக்கு ஆறுதல்: இன்றைய நிலவரம் என்ன

தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.கடந்த 3 நாட்களில் இதுவரை கிராமுக்கு 27 ரூபாய் சரிந்துள்ளது. இருந்தபோதிலும், தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் இருப்பது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

தங்கம் விலை இறங்குமுகம்! நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி! இன்றைய நிலவரம் என்ன

வெள்ளி விலையில் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.80ஆக இருந்தநிலையில் ஒரு ரூபாய் 30 காசு குறைந்து, ரூ.73.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1,300 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.