தங்கத்தின் விலை சமானிய மக்கள், நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் தொடர்ந்து 3வது நாளாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி,  தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 10ரூபாயும், சவரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.  

தங்கத்தின் விலை சமானிய மக்கள், நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் தொடர்ந்து 4வது நாளாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 10ரூபாயும், சவரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,670க்கும், சவரண் ரூ.37,360க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 விலை குறைந்து, ரூ4,660 ஆகவும், சவரணுக்கு ரூ.80 சரிந்து ரூ.37,280க்கும் விற்கப்படுகிறது.

வருமானவரி செலுத்துவோர் கவனத்துக்கு! படிவம்26ஏஎஸ் பற்றி தெரியுமா!

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4660ஆக விற்கப்படுகிறது. 

தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்று மீண்டும் சரிந்துள்ளது. கடந்த வாரத்திலிருந்து தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.732 குறைந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு, 29 ரூபாயும், சவரனுக்கு ரூ.252 குறைந்துள்ளது. ஏறக்குறைய ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை குறைந்துள்ளது

ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தமா? உண்மை என்ன?

விலை மேலும் குறையுமா

அமெரிக்காவில் பணவீக்கம் உச்சகட்டமாக இருந்து வருகிறது. நாட்டில் அதிகரி்த்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி ஏற்கெனவே வட்டிவீதத்தை இருமுறை உயர்த்திவிட்டது. 
அமெரிக்க பெடரல் வங்கி சார்பில் இன்று நடக்கு்ம் நிதிக்கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில், கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஒருவேளை வட்டி உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட டாலரில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, அதிகமான வட்டி கிடைக்கும் என நம்பி அதில் கவனத்தை திருப்புவார்கள். இதனால் அடுத்துவரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஸ்பைஸ்ஜெட்டுக்கு மீண்டும் சிக்கல்: 9-வது முறையாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு?

டாலர் மதிப்பு அதிகமாகும்போது, டாலரில் வாங்கும் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க வேண்டிய நிலைக்கு பல நாடுகள் தள்ளப்படும். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையத்தொடங்கும்.

ஆதலால், பெடரல் வங்கியின் வட்டி குறித்த இந்த வார அறிவிப்பு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும், விலை மேலும் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதன் காரணமாகவே கடந்த வாரத்திலிருந்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 வரையிலும், அதற்கு முந்தைய வாரம் ரூ.1000 வரை குறைந்துவிட்டது. தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தக் காரணியும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வெள்ளி விலை இன்று அதிரடியாகக்குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசு குறைந்து, ரூ.61.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.800 சரிந்து, ரூ.61,700க்கு விற்கப்படுகிறது.