itr filing date: வருமானவரி செலுத்துவோர் கவனத்துக்கு! படிவம்26ஏஎஸ் பற்றி தெரியுமா!
நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்களாக இருக்கும் நாம், ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானவரியை முறையாகச் செலுத்துகிறோம். வருமானவரி செலுத்துவோர் ஒவ்வொருவரும் வரியின் வீதங்கள், வரித்தள்ளுபடிகள்,கழிவுகள் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்களாக இருக்கும் நாம், ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானவரியை முறையாகச் செலுத்துகிறோம். வருமானவரி செலுத்துவோர் ஒவ்வொருவரும் வரியின் வீதங்கள், வரித்தள்ளுபடிகள்,கழிவுகள் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
இந்த நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டதுதான் ஃபார்ம் 26ஏஎஸ்(Form26AS)
ஃபார்ம் 26ஏஎஸ் என்றால் என்ன?
படிவம் 26ஏஎஸ் என்பது, வரிசெலுத்தியதற்கான ஒருங்கிணைந்த அறிக்கை. அதாவது, வருமானவரி செலுத்தியோர் செலுத்திய வரி, வரி பிடித்தம், வரி எங்கிருந்து பிடிக்கப்பட்டது, அட்வான்ஸ் டேக்ஸ், உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருக்கும். இந்தத் தகவல் ஒவ்வொரு பான்கார்டு எண்ணுக்கும் தனிப்பட்டு இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் வருமானவரி செலுத்துபவர் வாங்கிய, விற்ற சொத்துக்கள் விவரம், பரஸ்பரநிதித் திட்டம், சேமிப்புக் கணக்கிலிருந்து வங்கி டெபாசிட் விவரம், பணம் எடுத்தவிவரம் உள்ளிட்டவை அடங்கியிருக்கும். வரி செலுத்தும் நபர், தான் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தபின், 26ஏஎஸ் படிவத்தைப் பார்த்து வரித் தள்ளுபடி கோர முடியும்
26ஏஎஸ் பிரிவில் என்னென்ன அம்சங்கள் உள்ளன
வரி செலுத்துவோர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் முன்பு வரி பிடித்தம் செய்யப்பட்ட விவரங்கள் குறித்து வருமானவரி விவரத்தில் குறிப்பிட்ட விவரங்கள் சரியானவை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதை 26ஏஎஸ் படிவத்தில்தான் செய்ய முடியும். இந்த படிவத்தை வருமானவரித்துறை இணையத்தளத்திலிருந்து பதவிறக்கம் செய்யலாம்.
ஃபார்ம் 26ஏஎஸ் படிவத்தில் இருக்கும் அம்சங்கள் :
1. டிடிஎஸ் விவரங்கள்
2. வரி வசூலிக்கப்பட்ட மூல விவரம்
3. அட்வான்ஸ் வரி, சுயமாக மதிப்பீட்டு வரி குறித்த விவரங்கள்
4. வருமானவரி ரீபண்ட் விவரங்கள்
5. அசையா சொத்துக்கள் விற்பனையில் வரிப் பிடித்த விவரங்கள்
6. வரிபிடித்தம் எங்கு செய்யப்பட்ட விவரங்கள்( எந்த நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்டது, நிறுவனத்தின் டிஏஎன் எண், வரிபிடித்தம், வரி பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப்பட்ட தொகை) ஆகியவை இருக்கும்.
7. படிவம் 15ஜி அல்லது 15ஹெச் அடிப்படையில் வரி பிடித்தம் செய்யப்பட்ட விவரங்கள்
8. அசை சொத்துக்களை விற்பனை செய்திருந்தால், வரி பிடித்தம் விவரங்கள்
9. வரி வசூலிக்கப்பட்ட மூல விவரங்கள்
10. டிடிஎஸ், டிசிஎஸ் தவிர்த்து வரி பிடித்தம் செய்யப்பட்ட விவரங்கள்
11. ரிபண்ட் பெறப்பட்ட விவரங்கள்
12. எஸ்எப்டி பரிமாற்றம். அதாவது ஏதாவது ஒருநிறுவனம்,தனிநபர், பரஸ்பர நிதி ஆகியவற்றுக்கு அதிகமான பணம் பரிமாற்றம்செய்யப்பட்ட விவரம்
13. அசையா சொத்துக்களை விற்பனை செய்திருந்தால் வங்கியவர், விற்றவர் குறித்த விவரங்கள்