Asianet News TamilAsianet News Tamil

atm transaction limit: ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தமா? உண்மை என்ன?

ஏடிஎம் மையத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் எடுப்பவர் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.173 பிடிக்கப்படும் என்ற தகவல் உண்மையானதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

will rs 173 will be deducted after 4 atm withdrawals? PIB Fact Check
Author
New Delhi, First Published Jul 12, 2022, 1:54 PM IST

ஏடிஎம் மையத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் எடுப்பவர் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.173 பிடிக்கப்படும் என்ற தகவல் உண்மையானதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நவீன உலகில், வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் தகவல்கள் மிக விரைவாக பரவுகின்றன. அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகூட அறியாமல் உடனுக்குடன் அடுத்தவர்களுக்கு அனுப்பி அவர்களையும் பீதியில் ஆழ்த்துகிறார்கள். இதுபோன்ற ஒரு செய்திதான் வைரலாகி வருகிறது.

will rs 173 will be deducted after 4 atm withdrawals? PIB Fact Check

வாட்ஸ்அப்களில் வைரலாகும் அந்த செய்தியில், “ ஏடிஎம் மையத்தில் ஒருவர் 4 முறைக்கு மேல் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்தால், அவரிடம் இருந்து ரூ.173 பிடிக்கப்படும். 

ஸ்பைஸ்ஜெட்டுக்கு மீண்டும் சிக்கல்: 9-வது முறையாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு?

அதாவது, ரூ.150 வரியாகவும், ரூ.23 சேவைக்கட்டணமாகவும் பிடிக்கப்படும். ஜூன் 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் 4 பரிமாற்றத்துக்குப்பின், ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை அனைவரிடமும் ஃபார்வேர்டு செய்யவும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த செய்தி குறித்த உண்மைத் தன்மையை அறிந்து மத்திய அரசு விளக்கம் அளி்த்துள்ளது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட, பிஐபி(PIB) நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட விளக்கத்தில் “ ஒவ்வொருவரும் மாதந்தோறும் 5 ஏடிஎம் பரிமாற்றம்வரை கட்டணமில்லாமல் செய்யலாம். அதன்பின் நடக்கும் பரிமாற்றத்துக்கு ரூ.21 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

china bank protest: சீனாவில் வங்கிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: பணம் வழங்க அரசு உறுதி

அதுமட்டுமல்லாமல் பிஐபி நிறுவனம் வங்கிகளின் சுற்றிக்கையையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

will rs 173 will be deducted after 4 atm withdrawals? PIB Fact Check

வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் மாதத்துக்கு 5 பரிமாற்றங்கள் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்களில் எவ்வித கட்டணமின்றி செய்யலாம். அதுமட்டுமல்லாமல் தாங்கள் கணக்கு வைக்காத பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மெட்ரோ நகரங்களாக இருந்தால் 3 பரிமாற்றங்களும், மெட்ரோநகரங்கள் அல்லாத நகரங்களாக இருந்தால், 5 பரிமாற்றங்களும் கட்டணமின்றி செய்யலாம்.

supermoon 2022: சூப்பர்மூன் 13-ம்தேதி இரவு வானில் தோன்றும்: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?

இந்த இலவச பரிமாற்றத்துக்குப்பின், வாடிக்கையாளர் செய்யும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்ககப்படும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இந்த சுற்றறிக்கையை பிஐபி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios