22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் சரிந்துள்ளது. 

22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் வீழ்ச்சி அடைந்துள்ளது 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,7405க்கும், சவரன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.68 குறைந்து, ரூ4,672 ஆகவும், சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கும் விற்கப்படுகிறது.

மோடி எபெக்ட்: மேக் இன் இந்தியா திட்டத்தால் பொம்மை ஏற்றுமதி 61% அதிகரிப்பு: இறக்குமதி 70% குறைந்தது

தங்கத்தின் விலை கடந்த 5-வது நாளாக உயர்ந்து வந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் தங்கத்தின் விலை கிராமுக்கு, 127 ரூபாய் அதிகரித்துள்ளது, சவரனுக்கு, ரூ1016 அதிகரித்துள்ளது. ஆனால், நேற்று சவரணுக்கு ரூ.520 குறைந்து நிலையில், இன்று சவரனுக்கு 544 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் பெற்ற உயர்வு கடந்த இரு நாட்களில் இழந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1064 குறைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரு நாட்களாக நிலையற்றதாக இருந்து வருகிறது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ், பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. 

ஹெல்த் முக்கியம்! 2022ம் ஆண்டின் சிறந்த மருத்துவக் காப்பீடு திட்டங்கள்: ஒரு பார்வை

அதுமட்டுமல்லாமல் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும், உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்தஇரு நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. 

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அனைத்துக் கணிப்பையும் மீறி தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசு குறைந்து ரூ.62.40க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.62,400க்கு விற்கப்படுகிறது.