pm modi: மோடி எபெக்ட்: மேக் இன் இந்தியா திட்டத்தால் பொம்மை ஏற்றுமதி 61% அதிகரிப்பு: இறக்குமதி 70% குறைந்தது
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது, இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது, இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஹெச்எஸ் கோட் 9503, 9504, 9505 ஆகியவற்றின் இந்தியாவின் பொம்மை இறக்குமதி 2018-19ம் ஆண்டில் 37.10 கோடி டாலராக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில், 11.10 கோடி டாலராகக்குறைந்துள்ளது. ஏறக்குறைய 70.35 சதவீத பொம்மை இறக்குமதி குறைந்துள்ளது.
அதேசமயம், ஹெச்எஸ் கோட் 9503 பொம்மை இறக்குமதி 2018-19ம் ஆண்டில் 30.4 கோடி டாலராக இருந்தது, 2021-22ம்ஆண்டில் 3.60 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து பொம்மை ஏற்றுமதி 61.38 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹெச்எஸ் கோட் 9503, 9504, 9505 ஆகியவற்றின் பொம்மை ஏற்றுமதி கடந்த 2018-19ம் ஆண்டில் 20.20 கோடி டாலராக இருந்தது, 2021-22 ஆண்டில் 32.60 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஹெச்எஸ் கோட் 9503 பொம்மை ஏற்றுமதி 2018-19ம் ஆண்டில் 10.90 கோடி டாலராக இருந்தது, 2021-22ம் ஆண்டில் 17.70 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறையின் கூடுதல் செயலாளர் அனில் அக்ரவால் கூறுகையில் “ பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் இந்திய பொம்மை தயாரிப்புத் துறை ஊக்கம் பெற்று,மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு சரியான பொம்மைகள் சேர வேண்டும், குழந்தைகள் பொம்மைகள் மூலம்தான் கற்கிறார்கள், இந்தியாவின் உயர்ந்தமதிப்புகளுக்கு ஏற்றார்போல் பொம்மை தயாரிக்க வேண்டும், இந்திய வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதத்தில் பொம்மைகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் பல்வேறு தலையீடு, ஊக்க நடவடிக்கையால், பொம்மை தயாரிக்கும் துறை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நல்ல முடிவுகளை அளித்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு பிஐஎஸ் சான்று, தரச்சான்று வழங்கப்பட வேண்டும், சுங்கவரி அதிகப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்
2020ம் ஆண்டு பொம்மைகளுக்கான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தியது. தரக்கட்டுப்பாட்டு உத்தரவின்படி ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு பொம்மையும் தரச்சான்று பெற்று, பிஐஎஸ் முத்திரையுடன் அனுப்பப்பட வேண்டும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொம்மைகளுக்கும் பொருந்தும்.