ஒரே ஜம்பில் 250 ரூபாய் கூடிய தங்கத்தின் விலை - ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்த வெள்ளியின் விலை!
Gold Rate Increased : கடந்த வெள்ளிக்கிழமையை ஒப்பிடும்போது ஒரேடியாக 250 ரூபாய் வரை தங்கத்தின் விலை கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று தங்கம் விலை ரூபாய் 250 வரை உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ.78,700 என்ற புதிய வரலாறு காணாத அளவில் வார துவக்கத்தை பீதியுடையதாக மாற்றியுள்ளது என்றே கூறலாம். நகைக்கடைக்காரர்களின் நிலையான கொள்முதல் ஆதரவு மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் உறுதியான போக்கு ஆகியவற்றின் காரணமாக. கடந்த வெள்ளியன்று தங்கம் 10 கிராமுக்கு ரூ.78,450 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று சுமார் 250 ரூபாய் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.78,700 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
இருப்பினும் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.94,200ல் இருந்து ரூ.200ஆக குறைந்து இன்றைய நாளின் முடிவில் ரூ.94,000 ஆக குறைந்துள்ளதாக அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 99.5 சதவீத தூய்மையான தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ.78,300 என்ற வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முந்தைய அமர்வில், அதாவது கடந்த வெள்ளிக்கிழமை தூய்மையான தங்கம் 10 கிராமுக்கு ரூ.78,100 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1,000 ரூபாய் முதலீட்டை 2 கோடியாக மாற்றும் மியூச்சுவல் ஃபண்டு! வரியையும் சேமிக்கலாம்!
பங்குதாரர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் உள்நாட்டு (தங்கத்திற்கான) தேவை அதிகரித்ததே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதை தவிர, பல முதலீட்டாளர்கள் இப்பொது தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி தொடர்ந்து நகர்ந்ததால், பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் தங்கத்தின் எழுச்சிக்கு உதவியது என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதியை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஒரு கிராம் தங்கத்தின் விலை அப்போது 7120 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. ஒரு சவரன் தங்கம் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்த சூழலில் இப்போது தங்கத்தின் விலை வெறும் 3 நாட்களில் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் இந்த நிலையானது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால், டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் விலை சவரனுக்கு லட்சம் ரூபாயை எட்டுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவே மூன்று நாட்களுக்கு முன்பு உள்ள நிலையை ஒப்பிடும் பொழுது வெள்ளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதனுடைய புழக்கம் குறைந்துள்ளதால் அதன் விலை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
3 % அகவிலைப்படி உயர்வு.. எகிறும் சம்பளம்.. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!