niti aayog: 2030ம் ஆண்டில் ஒப்பந்த தொழிலாளர்கள் இ்ந்தியாவில் 200% அதிகரிப்பார்கள்: நிதிஆயோக் தகவல்
கிரிப்டோகரன்ஸிகளின் ராஜாவாக இருக்கும் பிட்காயின் மதிப்பு வரும் காலத்தில் 12ஆயிரம் டாலராகக் குறையும் என சீனவின் நாளேடு ஒன்று ஆய்வறிக்கையில் கூறியதால், கிரிப்டோ சந்தையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (gig workers) எண்ணிக்கை 2029-30ம் ஆண்டில் 200 சதவீதம் அதிகரித்து, 2.35 கோடியாக அதிகரிக்கப்பார்கள் என நிதிஆயோக் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது கிக் ஓர்கர்கஸ் எனப்படும், சுய வேலைவாய்ப்பு பெற்றோர், ஆன்லைன் நிறுவனங்களில் டெலிவரிசெய்வோர், சுயமாக தங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றிக்கொண்டோர், நிலையான வேலையில்லாதவர்கள் 77 லட்சம் பேர் உள்ளனர். இது அடுத்த7 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரிக்கும்
நிதி ஆயோக் அமைப்பின் சார்பில், “ இ்ந்தியாவில் அதிகரித்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பொருளாதாரமும்” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளடி, 2030ம் ஆண்டில் இந்தியாவில் உழைக்கும் பிரிவினரில் 4.1 சதவீதம்பேர் ஆன்லைனில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள். தற்போது 1.5சதவீதம் பேர் உள்ளனர்.
அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். நடுத்தரமான திறனுள்ள வேலைவாய்ப்புகள் 47%, உயர்ந்த திறனுள்ள வேலைவாய்பபுகள் 22 சதவீதம், 31 சதவீதம் குறைந்த திறனுள்ள வேலைவாய்ப்புகள்தான் உள்ளன.
ஜோமேட்டோ, ஸ்விக்கி, ஓலா உள்ளிட்ட ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களில்தான் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமீபகாலமாக வேலைபார்ப்பது அதிகரித்துள்ளது. அதிலும் பல தொழிலாளர்கள், ஓலா, உபர் போன்ற நிறுவனங்களுடன்ஒப்பந்தம் செய்து தங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றிக்கொண்டனர். இதில் தொழிலாளர்கள் பலர் பகுதிநேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ பணியாற்றுகிறார்கள்.
இந்த அறிக்கையில் முக்கியமாக, இந்தத் துறை சந்திக்கும் சவால்கள், அதை களைவதற்கான நடவடிக்கைகள், தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு உறுதி செய்தல், ஊதிய முறையில் ஏற்றத்தாழ்வுகளைக் களைதல், வேலையில் நிரந்தரமற்ற தன்மை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் பேசுகிறது. ஆன்-லைன் பிளாட்ஃபார்ம் நிறுவனத்துக்காக பணியாற்றும் தொழிலாளர்கள், சுய ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த ஒப்பந்தத்த தொழிலாளர்களுக்கு பணியிடத்திலும் பாதுகாப்புஇல்லை, நிறுவனத்திலும் இல்லை.
ஆன்லைன் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்கப்பட வேண்டும், அவர்கள் நோயில் விழுந்தால் குடும்பத்தினருக்கு நலதிட்ட உதவி, காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுவது குறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நலஉதவிகள், காப்பீடு, மருத்துவக்காப்பீடு, ஓய்வூதியம் குறித்து நிதிஆயோக் பரிந்துரைத்துள்ளது.
படிங்க, பயன்படுத்துங்க! மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு வருமான வரிச் சலுகைகளா?
ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், தொழிலுக்கும் ஊக்கம்அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு ஜனநாயகப்படுத்தப்படும். இந்த தளத்தில் நுழைவதற்கு குறைவான தடைகளே இருப்பதால், இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
இதற்கு முன் இருந்த இதேபோன்ற துறையைவிட இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
ஆன்லைன் வர்த்தகம், தளங்களில் பணியர்றும் தொழிலாளர்கள், அந்தத் தளத்தின் பொருளாதாரம், சிறப்புகள், குணங்க் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். எனத் தெரிவித்துள்ளது.