GDP grows 8.7% in FY 2022 and Highest in past 22 years : gdp of india:உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.கடந்த நிதியாண்டில் 8.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்று உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிஞ்சி நிற்கிறது.
உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.கடந்த நிதியாண்டில் 8.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்று உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிஞ்சி நிற்கிறது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் “ 2021-22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும். முந்தைய நிதியாண்டில் மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தநிலையில் கடந்தஆண்டில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டான 2022,ஜனவரி மார்ச் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 4.1சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் 3வது காலாண்டில் வளர்ச்சி 5.4சதவீதமாக இருந்தது” எனத் தெரிவித்தது.

உலக நாடுகளை மிஞ்சியது
ஆனால், உலக நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா , பிரி்ட்டன், சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான் வேகமாக இருக்கிறது. 2021-22 நிதியாண்டில் ஜப்பானின் வளர்ச்சி 1.6 சதவீதமாகவும், ஜெர்மனியின் வளர்ச்சி 2.8சதவீதமாகவும், பிரான்ஸின் வளர்ச்சி 7%, அமெரிக்கா 5.7சதவீதமாகவும் இருக்கிறது.
பிரிட்டனில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாகவும், சீனாவின் வளர்ச்சி 8.1சதவீதமாகவும், இந்தியாவின வளர்ச்சி 8.7 சதவீதமாகவும் இருக்கிறது. வளர்ந்துவிட்ட நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரி்த்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸில் சென்றுவிட்டது. அதன்பின் மீண்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது
ஏன் ஜிடிபி வளர்ச்சிமுக்கியம்
2020ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மைனஸில் சென்றுவிட்டது. சுதந்திரத்துக்குப்பின் பொருளாதாரம் மோசமாக வீழ்ந்தது அந்தக் காலக்கட்டத்தில்தான். நாட்டில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பொருளாதார வளர்ச்சி முடங்கியது.
அதிலிருந்து பொருளாதாரம் மீண்டு அடுத்த ஆண்டிலேயே அதாவது 2021-22 நிதியாண்டில் 8.7 சதவீதம் வளர்ச்சி காண்பது அசாத்தியமானது. முதல்கட்ட கணிப்பில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதாக இருந்த நிலையில் பின்னர் 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2022-23ம் ஆண்டு பொருளாதாரவளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை குறைவு
மத்திய அரசின் தீவிர நடவடிக்கை, வரி வசூல், ஜிஎஸ்டி வருவாய், முதலீடுகளை விற்றல் ஆகியவற்றால் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையும் குறைந்துள்ளது. 2021-22ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6.71 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நிதிஅமைச்சகம் முன்பு கணித்த 6.9சதவீதத்தை விடக் குறைவாகும். கடந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 4.37 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையை 6.8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைக்கப்பட்டு அதுபோல் மத்திய அரசு செய்துள்ளது.

நிதிப்பற்றாக்குறையைத் குறைத்தல், ஜிஎஸ்டி வரிவசூல் உயர்வு, ஜிடிபிஉயர்வு போன்றவை இந்தியாவை மீண்டும் சர்வதேச அரங்கில் விஸ்வரூமெடுக்க வைத்துள்ளது. ஆனால், ரஷ்யா உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய முதலீடு வெளியேற்றம் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகத்தை இறுக்கிப் பிடிப்பதாக அமைந்துள்ளது.
