GAGAN: இன்டிகோ விமானம் புதிய மைல்கல்: உள்நாட்டில் தயாரான ‘ககன் நேவிகேஷனை’ பயன்படுத்தி தரையிறங்கி சாதனை

GAGAN : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி, தரையிறங்கிய ஆசியாவிலேயே முதல் விமானம் எனும் பெருமையை இன்டிகோ விமானம் பெற்றுள்ளது.

GAGAN : IndiGo becomes 1st airline to land aircraft using navigation system GAGAN

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி, தரையிறங்கிய ஆசியாவிலேயே முதல் விமானம் எனும் பெருமையை இன்டிகோ விமானம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ககன் வழிகாட்டி அமைப்பைப் பயன்படுத்தி இன்டிகோ நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 ரக விமானம் அஜ்மீரில் உள்ள கிஷான்கார்க் விமானநிலையத்தில் நேற்ற வெற்றிகரமாகத் தரையிறங்கியது. 

GAGAN : IndiGo becomes 1st airline to land aircraft using navigation system GAGAN

இந்த ககன் நேவிஷனை இந்திய விமான ஆணையம், மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்துள்ளனர். விமானம் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் இறங்குவது குறித்து தேவையான வழிகாட்டல்களை ககன் நேவிகேஷன் வழங்கும், குறிப்பாக சிறிய விமானநிலையங்களுக்கு இது பொருந்தும்.

இன்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில் “ இந்திய விமானப் போக்குவரத்துறையில் இன்று மைல்கல். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ககன் ஜிபிஎஸ் நேவிகேஷனைப் பயன்படுத்தி இன்டிகோ விமானம் தரையிறங்கியது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நேவிகேஷனைப் பயன்படுத்தி விமானத்தை தரையிறங்கிய 3-வது நாடு இ்ந்தியா. இதற்கு முன் அமெரி்க்கா,  ஜப்பான் நாடுகள் மட்டுமே இதைச் செய்துள்ளன. 

GAGAN : IndiGo becomes 1st airline to land aircraft using navigation system GAGAN

சிவில்விமானப் போக்குவரத்தில் ககன் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். விமானங்களை நவீனப்படுத்துதல், விமானத் தாமதத்தைத் தவிர்த்தல், எரிபொருள்சிக்கனம், பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ககன் நேவிகேஷன் உதவியாக இருக்கும். டிஜிசிஏ, இஸ்ரோ, இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு நன்றி, இந்த வரலாற்று முக்கியத்துவத்தில் இன்டிகோ நிறுவனமும் இணைந்துள்ளது”எ னத் தெரிவித்தார்

2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குப்பின் இந்தியாவில் பதிவு செய்யப்படும் விமானங்களில் ககன் நேவிகேஷன் பொருத்துவது கட்டாயம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவி்த்துள்ளது. கககன் நேவிகேஷன் செயற்கைக்கோள் அடிப்படையிலான முறையில் இயங்குகிறது
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios