Asianet News TamilAsianet News Tamil

ரயில் பயணிகளுக்கு சாப்பாடு இலவசம்.. இப்படி ஒரு வசதி இருப்பது தெரியுமா?

ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு இலவசமாக சாப்பாடு விநியோகம் செய்யும் விதிமுறைகளை குறித்து பலர் அறிந்திருக்கமாட்டார்கள். 

free food to train passengers  irctc rule
Author
First Published Apr 25, 2023, 5:51 PM IST | Last Updated Apr 25, 2023, 5:51 PM IST

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ரயில் போக்குவரத்து தான் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களின் பயணத்தை எளிமையாக்கி வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல பயணத்தை திட்டமிட ரயில் சேவை தான் சிறந்த தேர்வு. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால் இந்திய ரயில்வேயில் இந்த அறிவிப்பு உங்களை குஷியாக்கி விடும். அவ்வப்போது பயணிகளுக்கு இலவச வசதிகளை இந்திய ரயில்வே அறிவிப்பது வழக்கம். 

இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். அப்போது, ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இலவசமாக சாப்பாடு பரிமாறப்படும் என்ற தகவலை பகிர்ந்தார். அடுத்து நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது உங்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும். 

இலவச உணவு

ஐஆர்சிடிசியின் (IRCTC) புதிய விதிமுறைகளின்படி, ரயிலில் பயணம் செய்வோர் சாப்பாடிற்கு பணம் செலுத்த தேவையில்லை. ரயில் பயணிகளுக்கு எல்லா சேவைகளும் ரயில்வே மூலமாகவே செய்யப்படும். இது குறித்து மக்களில் பலர் விழிப்புணர்வு அடையவில்லை. அதனால் ரயில் பயணிகள் இந்த வசதிகளை பயன்படுத்துவதேயில்லை என கூறப்படுகிறது. இந்திய ரயில்வேயின் சேவை தரமானதாக இருந்தாலும், ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் அதிகமாகிவிடுகிறது. சில ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தை விடவும் தாமதமாகவே வந்தடைகின்றன. இப்படி தாமதமாக வரும் ரயில்களை பதிவு செய்துள்ள பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் இலவச உணவு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்குட்பட்டது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா! இத்தனை லட்சத்துக்கு புடவையா? நீதா அம்பானி உடுத்திய உலகின் விலையுயர்ந்த புடவை.! அப்படி என்ன சிறப்பு

அதென்ன விதிமுறை? 

ஐஆர்சிடிசியின் (IRCTC) விதிகளின்படி, ரயில் பயணிகளுக்கு இலவசமாக சாப்பாடு வழங்கும் சேவை செயல்பட்டு வருகிறது. நீங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கால தாமதமாக ரயில் நிலையத்தை வந்தடையும்போது இந்த வசதி உங்களுக்கு தரப்படுகிறது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மட்டும் தான் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. அதாவது சதாப்தி (Shatabdi Express), ராஜ்தானி (Rajdhani Express), துரந்தோ (Duronto Express) ஆகிய விரைவு ரயில்களில் பயணிக்கும் நபர்கள் தான் இந்த சேவையை பெற முடியும். 

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் 

ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  நீங்கள் குறிப்பிட்ட சில காரணங்களால் ரயிலை தவறவிடும்பட்சத்தில், உங்கள் பணத்தைத் திரும்ப பெறமுடியும். நீங்கள் ரயிலை தவறவிட்டால், ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய 1 மணி நேரத்திற்குள் TDR படிவத்தை நிரப்பி டிக்கெட் கவுண்டரில் கொடுக்க வேண்டும். அப்போது உங்களுடைய பணம் திரும்ப கிடைக்கும். 

இதையும் படிங்க: Vaccines: குழந்தைகளுக்கு கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios