கருப்புப் பணம் :
டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் பொருட்டு,3 லட்ச ரூபாய்க்கு மேல், ரொக்க பரிவர்த்தனை செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை தெரிவித்துள்ளது.
காலக்கெடு : ஏப்ரல் 1
இந்த விதிமுறைகள், ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு பொருந்தும் என என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது இந்த விதி ...!
அதாவது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் , ரொக்க பரிவர்த்தனை செய்தால், அதே அளவான பணத்தை அபராதமாக விதிக்கப்படும்.அதாவது 4 லட்சம் கொடுத்து ஒருவர் எதாவது ஒரு விலைமதிப்புள்ள பொருளை வாங்கினார் என்றால், அதே நான்கு லட்சம் ரூபாயை அபராதமாக விதிக்கப்படும் என இந்த புது விதி சொல்கிறது.
இதனால் என்ன லாபம் :
இந்த நடைமுறை, அமலுக்கு வந்தால், ரொக்க பரிவர்த்தனை தடுக்கப்படும், கருப்பு பண பரிமாற்றம் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் பொருந்தாது :
வங்கிகள், அரசு, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விதி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் விவரம் .
