flight tickets:தமிழகத்திலிருந்து குவைத், கத்தார், சவுதிஅரேபியாவுக்கு அதிகரித்த விமானக் கட்டணம்: ஏன் தெரியுமா?

flight tickets:தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபுஅமீரகம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு திடீரென விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்தது ஏன் எனத் தெரியுமா.

flight tickets: Air Tickets to UAE, Qatar, Kuwait Become Costlier From Tamil Nadu. Heres Why

தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபுஅமீரகம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு திடீரென விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்தது ஏன் எனத் தெரியுமா.

தமிழகத்திலிருந்து ஏராளமானோர் வேலைக்காகவும், தொழில் செய்யவும், சுற்றுலாவுக்காகும் வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறார்கள். இதனால்தான் வளைகுடா நாடுகளில் இருந்து நேரடியாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை நகரங்களுக்கு விமானச் சேவை இயக்கப்பட்டு வந்தது. 

flight tickets: Air Tickets to UAE, Qatar, Kuwait Become Costlier From Tamil Nadu. Heres Why

ஆனால், கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபுஅமீரகம், கத்தார், குவைத் ,ஏமன் நாடுகளுக்கான விமானடிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ சென்னையிலிருந்து துபாய் நகருக்கு விமான டிக்கெட் கட்டணம் ரூ.40ஆயிரம்முதல் ரூ.ஒரு லட்சம் வரை இருக்கும்.

 ஆனால், தற்போது ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. 
மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், சவுதி போன்ற நகரங்கள், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் செல்லும் விமானங்களுக்கு டிரான்சிஸ்ட் விமானநிலையங்களாக இருக்கின்றன. வளைகுநாடா நாடுகளில் இருந்து பல பயணிகள் வேறு விமானங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் செல்கிறார்கள். 

flight tickets: Air Tickets to UAE, Qatar, Kuwait Become Costlier From Tamil Nadu. Heres Why

தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சர்வதேச விமான நிறுவனங்கள் சென்ற நிலையில் தற்போது ஏர்இந்தியா, இன்டிகோ விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து துபாய்க்கு தினசரி 7 விமானங்கள் பறந்த நிலையில் தற்போது தினசரி 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 

தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்களைக் குறைத்து விமானக் கட்டம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா மட்டும்தான் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. வேறு எந்தநிறுவனத்திடமும் நீண்டதொலைவு பறக்கக்கூடிய  அளவு விமானங்கள் இல்லை. ஆதலால், நீண்டதொலை பறக்கக்கூடிய விமானங்கள் பற்றக்குறையும் கட்டணம் உயர்வுக்குகாரணமாகும் “ எனத் தெரிவித்துள்ளது.

flight tickets: Air Tickets to UAE, Qatar, Kuwait Become Costlier From Tamil Nadu. Heres Why

தனியார் விமானநிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ விமானநிறுவனங்கள் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கமாட்டார்கள். நிறுவனங்களுக்கு இடையே மட்டுமே பேசிக்கொள்வார்கள். இதனால், அரசின் வான்கொள்கையோடு சில நேரங்களில் முரண்படுவார்கள்.
 
ஏராளமான விமானங்கள் வர வேண்டும், வர்த்தகம் பெருக வேண்டும் என்பதற்காவே தடையில்லா வான் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆனால், உள்நாட்டு விமானங்கள் சின்டிகேட் அமைத்துக்கொண்டு கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

மத்தியகிழக்கு நாடுகளுக்கு நீண்டதொலைவு பறக்கக்கூடிய அளவு திறனுள்ள விமானங்கள் இல்லாததுதான், விமானக்கட்டணம் உயர்வுக்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவி்த்தார்

flight tickets: Air Tickets to UAE, Qatar, Kuwait Become Costlier From Tamil Nadu. Heres Why

ஸ்கை டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிகாரி அப்துல்லா ரபீக் கூறுகையில் “  மத்திய கிழக்கு வளைகுடாநாடுகளுக்கு போதுமான விமானங்கள் இல்லாததே டிக்கெட் கட்டண உயர்வுக்கு காரணம். அதிகமான விமானங்களைஇந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்காதவரையில், டிக்கெட் குறையவாப்பில்லை” எனத் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios