Russia-Ukraine War:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களான ஃபிட்ச், மூடிஸ் ஆகியவையும் இன்று குறைத்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களான ஃபிட்ச், மூடிஸ் ஆகியவையும் இன்று குறைத்துள்ளன.

இதன்படி ஃபிட்ச், மூடிஸ் நிறுவனங்கள் ரஷ்யாவின் தரவரிசையை “BBB” என்ற நிலையலிருந்து “B” ஆகவும், மூடிஸ் நிறுவனம் “Baa3” என்றதிலிருந்து “B3” ஆகவும் குறைத்துள்ளன.

ரேட்டிங்கின் முக்கியத்துவம்

இந்த சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களின் ரேட்டிங்கை வைத்துதான் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் நாடுகளுக்கு கடன் கொடுக்கின்றன, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ரேட்டிங் அடிப்படையில்தான் முதலீடு செய்யமுன்வருவார்கள். இந்த ரேட்டிங் குறைக்கப்பட்டாலோ அல்லது குறைந்திருந்தாலோ புதிய வெளிநாடு முதலீ்ட்டாளர்கள் வரமாட்டார்கள், ரஷ்யாவுக்கு வெளிநாடுகளில் கடன் கிடைக்காது, உலக வங்கி, சர்வேச நிதியத்திலிருந்தும் கடன் பெற முடியாது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரி்ட்டன் என வரிசையாக பல்வேறு தடைகளைவிதித்துள்ளன. 

வான் வெளிகளை மூடுதல், ரஷ்ய வங்கிகள் ஸ்விப்ஃட் வங்கி பணப்பரிமாற்ற சேவையை பயன்படுத்தவிடாமல் தடுத்தல், அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிளின் வரலாற்று சரிவு, ரஷ்ய மத்திய வங்கியுடன் பரிமாற்றத்துக்கு அமெரிக்காவின் தடை போன்றவை ரஷ்யாவுக்கு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்

ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட இந்த பொருளாதார, நிதித்தடைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சிக்கலாக மாறும் என்பதாலும், ரஷ்யாவை பழிவாங்கவும் பல நிறுவனங்கள் அந்நாட்டை விட்டுவெளியேறும் முடிவையும் எடுத்துள்ளன.

இப்போது இந்த ரேட்டிங் நிறுவனங்களும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை தாழ்த்தியுள்ளன. ஏற்கெனவே எஸ்அன்ட்பி எனும் ரேட்டிங் நிறுவனம் கடந்த வாரம் ரஷ்யாவின் ரேட்டிங்கை ஜங்க் பட்டியலில் வைத்தது.

சர்வதேச சந்தையில் இன்டெக்ஸ் வழங்கும் அமெரிக்காவின் எப்டிஎஸ்இ ரஸல், லண்டனின் எம்எஸ்சிஐ ஆகிய நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளன. அனைத்துவிதமான குறியீடுகளில் இருந்தும் ரஷ்யாவை நீக்குவதாக இரு நிறுவனங்களும் அறிவித்து இந்த முடிவு வரும் 7ம் தேதி முதல் நடைமுறைக்குவரும் எனத் தெரிவித்துள்ளன.

ஃபிட்ச் நிறுவனம் விடுத்த அறிக்கையில் “ உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால், ரஷ்யப் பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகள் நிலையற்றதன்மைக்கு வந்துள்ளன. ரஷ்யாவின் கடன்பெறும் திறன் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி 1.6% மாகக் குறையக்கூடும். ”எனத் தெரிவித்துள்ளது