கச்சா எண்ணெய் கடல் நீருடன் கலப்பு :

கடலில் இரண்டு கச்சா மற்றும் டீசல் எண்ணை கப்பல்கள் மோதி எண்ணை கடலில் கலந்து பல மீன்கள் செத்து கடல் மாசு பட்டதால் சென்னை வாழ் மக்கள் மீன் எரால் போன்ற கடல் வாழ் உணவுகளை வாங்க மறுப்பதால், மீன்களின் விலை கடுன் வீழ்ச்சியை கண்டுள்ளது.

ஆட்டிற்கு மாறிய அசைவ விரும்பிகள் :

கச்சா எண்ணெய் , கடல் நீருடன் கலந்ததன் விளைவாக , நோய் பரவும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து தற்போது, பொதுமக்கள் மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், அதற்கு பதிலாக , கோழி ஆடு என்று வாங்கி போவதால் மீன் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது . அதே சமயத்தில், கோழி மற்றும் ஆட்டின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதன் விளைவாக, கோழி மற்றும் ஆட்டிறைச்சியின் விலை உயர்ந்துள்ளது.

வஞ்சரம் விலை :

கிலோ 600 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மைப் படுத்தும் பணி தீவிரம் :

தொடர்ந்து 6 ஆவது நாட்களாக, கடற்கரை பகுதியில், கடல் நீரை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மேலும் பணிகள் முழுமையடைய இன்னும் ஒரு வார கால அவகாசம் தேவைப்படலாம் என்பதால், ஏற்கனவே கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள், ஆங்காங்கே தங்கள்

 இந்த நிலை இன்னும் ஓரு வாரம் வரை நீடிக்கும் என்பதால் சென்னைக்கு வரவேண்டிய விசை படகுகளை ஆங்காங்கே ஓரம்கட்டி வைகபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.