farm laws: 3 வேளாண் சட்டங்களை நீக்கியதுதான், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கும் மத்திய அரசின் முயற்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது என்று நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்தார்

3 வேளாண் சட்டங்களை நீக்கியதுதான், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கும் மத்திய அரசின் முயற்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது என்று நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்தார்

வருமானம் இருமடங்கு

மத்திய அரசு கொண்டு 3 வேளாண் சட்டங்குளுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிரப்புக் கிளம்பியது. ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

அதேசமயம், விவசாயிகள் வருமானம் 2022ம் ஆண்டுக்குள் இருமடங்காக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதியளித்திருந்தார். இந்த இலக்கின்படி விவசாயிகள் வருமானம் இரு மடங்காகுமா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் நிதிஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:

பின்னடைவு

விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரு மடங்காக்குவது என மத்திய அரசு இலக்கு வைத்திருந்தது. பிரதமர் மோடியும் பேசியிருந்தார். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றதுதான், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவதில் பின்னடைவை ஏற்படுத்தியது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புக் கிளம்பியவுடனே மாநிலங்களுடன் மத்திய அரசு வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசித்திருக்க வேண்டும். வேளாண் துறைக்கு சீர்திருத்தம் தேவை என ஏற்கெனவே எங்களிடம் பலர் முறையிட்டிருந்தார்கள். வேளாண் துறைக்கு சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை. விவசாயிகள் சிலர் இதை எதிர்த்தார்கள். ஆனால் மாநிலங்களுடன் உடனடியாக ஆலோசித்திருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.

வேளாண் சீர்திருத்தங்கள்

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவதில் முக்கியப் பங்காற்றுவது வேளாண் சீர்திருத்தங்கள். விவசாயிகள், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்கள் விளைப்பொருட்களுக்கு நல்ல விலைகிடைக்க, சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியம். சீர்திருத்தங்கள் நடக்காத நிலையில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும். அதும மட்டுமல்லாமல் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்குவதிலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பருவமழை சரியாக இருந்து, மற்ற காரணிகளும் சாதகமாக இருந்து, எதுவும் பாதகமில்லாமல் இருந்தால், வேளாண் துறை வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சிறப்பாக இருக்கும். 

பணவீக்கம்

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது மத்திய அரசுக்கும் கவலையை ஏற்படுத்துகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும். ஆனால், காய்கறிகள் விலை உயர்ந்தால், அது பருவநிலை உள்ளிட்டவைதான் காரணமாகக் கூற முடியும்.

இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்புக்கு சர்வதேச அளவில் நிலவும் சூழல்களும் முக்கியக் காரணம். உரங்கள் விலை அதிகரிக்கிறது, டீசல் விலை உயர்கிறது, இதனால், போக்குவரத்துச் செலவு அதிகரித்து, வேளாண் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.

இவ்வாறு ரமேஷ் சந்த் தெரிவித்தார்