EPFO: இபிஎஸ்-95 சந்தாதாரர்களுக்கு நிம்மதி! இபிஎப்ஓ புதிய அறிவிப்பு

இபிஎப்ஓ சந்தாதாரர்களுக்கு தங்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் இருக்கும்போது, பென்சன் திட்டத்தில்(இபிஎஸ்1995) இருந்தும் பணத்தை எடுக்கஅனுமதித்து இபிஎப்ஓ அமைப்பு முடிவு செய்துள்ளது.

EPFO simplifies withdrawal rules for EPS-95 customers.

இபிஎப்ஓ சந்தாதாரர்களுக்கு தங்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் இருக்கும்போது, பென்சன் திட்டத்தில்(இபிஎஸ்1995) இருந்தும் பணத்தை எடுக்கஅனுமதித்து இபிஎப்ஓ அமைப்பு முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள விதிப்படி பிஎப் சந்தாதாரர்கள் பணிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும் போது, தங்கள் பிஎப் பணத்தை எடுக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பென்சன் திட்டத்திலிருந்து எடுக்க முடியாது. இனிமேல் பென்சன் திட்டத்திலிருந்தும் எடுக்கலாம்.

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்:15% அதிகம்

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் பிஎப் அமைப்பின் மத்திய அறங்காவலர்களின் 232வது கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் இபிஎஸ்-95 பிரிவில் சில திருத்தங்கள் செய்யவும் அறங்காவலர்கள் குழு பரிந்துரைத்தது.

6 மாதங்களுக்கும் குறைவான சேவை உள்ள உறுப்பினர்களுக்கு இபிஎஸ் கணக்கிலிருந்து திரும்பப் பெறும் பலன்களை நீட்டிக்கவும் , 34 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு விகிதாசார ஓய்வூதிய பலன்களை நீட்டிக்கவும் அறங்காவலர்கள் குழு அரசுக்கு  பரிந்துரைத்தது. இதனால் ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய பலனை நிர்ணயிக்கும் நேரத்தில் அதிகமான தொகை பெற உதவும்.

எளிமையாகிறது ஐடிஆர் படிவம்: வருமானவரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரி படிவம்

2018 காலண்டர் ஆண்டில் வாங்கிய இடிஎப் யூனிட்களில் இருந்து கிடைக்கும் மூலதன ஆதாயம், 2022-23 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்கான வருவாயில் சேர்க்கவும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர 2021-22ம் ஆண்டில் பிஎப் அமைப்பு செயல்பாடு குறித்த 69-வது ஆண்டு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios