elon musk : tesla car: paytm :இந்தியாவில் டெஸ்லா காரை, உலக அதியசங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்கிற்கு பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் டெஸ்லா காரை, உலக அதியசங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்கிற்கு பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

பேடிஎம் சிஇஓ விஜய் ஷேகர் சர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவுக்கு வந்து முதல் டெஸ்லா காரை அறிமுகம் செய்தால் தாஜ்மஹாலில் அறிமுகம் செய்யுங்கள்” எனக் கோரிக்கை விடுத்தார்

அதற்கு எலான் மஸ்க் பதில் அளித்து ட்விட்டரில் ஆக்ரா கோட்டை புகைப்படத்தை பதிவிட்டு பதில் அளி்க்கையில் “ இந்தியாவில் ஆக்ராவில் அற்புதமான இடம். வியப்புக்குரிய இடம். 2007ம் ஆண்டு நான் வந்தபோது தாஜ் மஹாலைப் பார்த்தேன். உண்மையில் உலகின் அதிசயங்களில் ஒன்று” எனத் தெரிவித்தார்

எலான் மஸ்க், அவரின் தாய் மே கடந்த 1954ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, ஆக்ராவை சுற்றிப் பார்த்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

பேடிஎம் சிஇஓ விஜய் ஷேகர் சர்மா மற்றொரு ட்விட்டில் “ இந்தியாவில் உள்ள சாலைகளுக்கு ஏற்றார்போல் டெஸ்லா காரை வடிவமைப்பது புதிய சவாலாக இருக்கும். சாலையைப் பயன்படுத்தும் பெரும்பாலும் விதிகளைக் கடைபிடிக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

எலான் மஸ்க் டெஸ்லா தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க பல்வேறு மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தெலங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ் தெலங்கானாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்க அழைப்பு விடுத்தார். 

ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரில் “ இந்தியாவில்என்னுடைய கார்களை தயாரித்து விற்க மத்திய அரசிடம் இருந்து ஏராளமான சவால்கள் வருகின்றன. இந்தியாவில் டெல்ஸாவை இறக்குமதி செய்ய நினைத்தால், பேட்டரி கார்களுக்கு உலகிலேயே அதிகமான வரி இந்தியாவில்தான் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்

ஆனால், மத்திய அரசோ, எலான் மஸ்க் இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைத்து இங்கு தயாரித்தால்தான் கார்களை விற்க அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளது. சீனாவில் கார்களை தயாரித்து இந்தியாவில் விற்க அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக ஏர்கெனவே தெரிவித்துள்ளார்.