2.5 லட்சம் உங்களுக்கு தான்..! தெரியுமா மோடியின் அசத்தல் திட்டம்..?

இதுவரை வீடு இல்லாதவர்கள், அதாவது தங்கள் பெயரில் இதுவரை எந்த ஊரு வீடும் இல்லாத நபர் வீடு வாங்க முற்பட்டால் அதற்காக மத்திய அரசிடம் இருந்து பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் இரண்டரை லட்சம் பெறலாம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வந்த இந்த அற்புத திட்டத்தால் கடந்த 5 ஆண்டுகளில்  பல லட்ச மக்கள் பயன்பெற்று உள்ளனர். அதாவது 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற  நோக்கத்தோடு கொன்டுவரப்பட்ட இந்த அற்புத திட்டம் முடிவடைய  இன்னும் சில நாட்களே உள்ளன.

அதாவது  வரும் மார்ச் 31, 2019-ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டு வீடு வாங்க வேண்டும் என கனவு காண்பவர்கள் சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளவது நல்லது. மேலும் வரும் ஏப்ரல் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற  உள்ளதால், மோடி அரசு  கூட்டும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில்  நடைபெற  உள்ளது. இதில் மேலும்  பல்வேறு  முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என  எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் வீட்டுக்கடன்  பெரும் போது  நமக்கு  இந்த இலவச நிதி கிடைக்கும். அதே சமயத்தில் இதுவரை உங்கள பெயரில் வீடு இல்லை என்றால் மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். மேலும், ஆண்டுவருமானதை பொறுத்து ஒரு சிலருக்கு  இந்த திட்டம் மூலம் பயன் கிடைக்காமல் போகும்.

இது தவிர வீட்டுக்கான ஜிஎஸ்டி மேலும்  குறைக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனவே வீடு வாங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த சலுகையை பெற குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் விரைந்து ஒரு நல்ல முடிவை எடுப்பது நல்லது.இந்த அற்புத திட்டத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியாத நிலையில், அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை கொண்டு செல்லலாமே..!