துபாயில் முதல் கிளை : அனுமதி வழங்கியது ஆர்.பி.ஐ.........!

இந்தியாவில், சிறப்பாக செயல்படும் தனியார் வங்கியான பெடரல் வங்கி, தற்போது துபாயில் தன்னுடைய புதிய கிளையை தொடங்க உள்ளது.

அதாவது, பெடரல் வங்கியை பொறுத்தவரையில், இந்தியாவில் மட்டும், 1,252 கிளைகள், 1,524 ஏடிஎம்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் வங்கியான பெடரல் வங்கிக்கு , இந்திய ரிசர்வ் வங்கியானது , தற்போது, துபாயில் புதிய கிளை தொடங்க அனுமதி வழங்கி உள்ளது.

இந்தக் புதிய கிளையானது , துபாய் இண்டர்நேஷனல் பைனான்சியல் மையத்தில் அமைய உள்ளது என்றும், இதன் மூலம் துபாயில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பான சேவையை வங்கி அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெடரல் வங்கியின் முதல் வெளிநாட்டு கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.