campa cola: reliance: இது 1970’- 80’ ‘கிட்ஸ்’களுக்கான செய்தி! 'கேம்ப கோலா' குளிர்பானம் மீண்டும் அறிமுகம்
கடந்த 1970 மற்றும் 1980களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அந்த குளிர்பானத்தின் சுவை, பிராண்ட், பெயர் அனைத்தும் பரிட்சயம். 1990களில் பிறந்தவர்களுக்கு அந்த குளிர்பானத்தின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடந்த 1970 மற்றும் 1980களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அந்த குளிர்பானத்தின் சுவை, பிராண்ட், பெயர் அனைத்தும் பரிட்சயம். அதன்பின் 1990களில் பிறந்தவர்களுக்கு அந்த குளிர்பானத்தின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த குளிர்பானத்தின் சுவை, பெயரைக் கேட்டாலே 1970, 1980களில் பிறந்தவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். கடந்த 1990களில் கொண்டுவரப்பட்ட தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் அந்த குளிர்பானம் இந்தியச் சந்தையிலிருந்து மறக்கடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தை கண்காணிக்க லடாக் எல்லையில் சீனா புதிய யுத்தி; புதிய படங்கள் வெளியாகி அதிர்ச்சி!!
இந்நிலையில் வரும் தீபாவளி முதல் மீண்டும் அந்த குளிர்பானம் இன்றைய இளைஞர்கள் கைகளிலும் கிடைக்கப் போகிறது. 1970 கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவரும் குடித்து, சுவைத்து மகிழப் போகிறார்கள்.
ஆமாம், அந்த குளிர்பானத்தின் பெயரையே கூறவில்லையே என்று கேட்பது தெரிகிறது.
அந்த குளிர்பானத்தின் பெயர் “ கேம்ப கோலா” எங்கேயே பெயரைக் கேட்டது போன்று இருக்கா.
இந்திய சந்தையில் பியூர் டிரிங்ஸ் குரூப் நிறுவனத்தால் “கேம்ப கோலா” குளிர்பானம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1970களில் இருந்து 1990 ம் ஆண்டு வரை இந்தியச் சந்தையில் சக்கை போடுபோட்டது கேம்ப்பகோலா குளி்ர்பானம்.
august gst collection :ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 6-வது மாதமாக சாதனை! ஆகஸ்ட் மாத வசூல் 28% அதிகரிப்பு
கடந்த 1949ம் ஆண்டு இந்தியாவில் கோகோ-கோலா குளிர்பானத்தை வெளியிட்டது பியூர் டிரிங்க் குரூப்தான். ஆனால், கோக் நிறுவனம் தயாரித்த குளிர்பானத்தின் ஃபார்முலாவை வெளியிட இந்திய அரசு கட்டாயப்படுத்தியதையடுத்து, இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறியது.
அதன்பின் 1970களில் பியூர் டிரிங்க் குரூப் கேம்ப்பகோலா குளிர்பானத்தை அறிமுகம் செய்தது. இந்தியச் சந்தையில் ஏறக்குறைய 15 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாபோல் கேம்ப்ப கோலா வலம் வந்தது. எந்த வெளிநாட்டு நிறுவனமும் போட்டிக்கு இல்லை என்பதால், கேம்ப கோலா குளிர்பானம் இளைஞர்கள் மத்தியில் பிராண்டாக மாறியது.
“தி கிரேட் இந்தியன் டேஸ்ட்” என்ற ஸ்லோகனில் கேம்ப கோலா அறிமுகமானது. 1991ம்ஆண்டு தாராளமயமாக்கலுக்குப்பின் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் வருகையால் கேம்ப கோலா குளிர்பானம் போட்டியைச் சமாளிக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. 2000 ஆண்டுகளில் கேம்ப்பகோலா நிறுவனத்தின் பல கிளைகள் மூடப்பட்டன
lpg cylinder price: lpg price: மிகப்பெரிய நிம்மதி! எல்பிஜி சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு
இந்நிலையில் சமீபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் கேம்ப கோலா என்ற பிராண்ட் பெயரை ப்யூர் ட்ரிங்ஸ் குழுமத்திடம் ரூ.22 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டுக்கூட்டத்தில் ரீட்டெயில் நிறுவனம் எப்எம்சிஜி தொழிலை விரிவுபடுத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக தீபாவளிக்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர், ஜியோ ஸ்டோர் மற்றும் 15 லட்சம் கடைகளில் மீண்டும் கேம்ப கோலாவை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தி எக்னாமமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.